குழந்தை பிரசன்னம்* 19/10/2021
*குழந்தை பிரசன்னம்* என் நண்பர் வீட்டில் குழந்தை பிறந்துள்ளதை அறிந்து, என்ன குழந்தையாக இருக்கும் என பிரசன்னம் போட்டேன். அவரவர்க்கு தெரிந்த வரையில் ஒவ்வொரு பதிலைக் கூறினர். எது சரி என்பதை எப்படி பிரசன்னம் காட்டுகிறது என்பதே இன்றையப் பிரசன்னம். சித்தர் போற்றி! சிவன் போற்றி!எல்லாம் வல்ல வாலைத் தாயே போற்றி! நவநாதர்கள் போற்றி! போற்றி! என் அகம்தனில் எழுந்தருளி நாவினில் அமர்ந்து வாசிக்குதிரை ஏறி நல்வாக்கினை அருள்வீரே! *இன்றைய ஜாமக்கோள் பிரசன்னம்* *குழந்தை பிரசன்னம்* *கேள்வி* : நண்பர் வீட்டில் பிறந்துள்ள குழந்தை ஆணா? பெண்ணா? *பிரசன்னத்தின் பதில்* *பெண் குழந்தை* *பிரசன்னத்தின் விளக்கம்* உதயம் மகரம் ஆருடம் 8ல் சிம்மம் கவிப்பு 10ல் துலாம் உதயாதிபதி சனி 6ல் ஆருடத்தில் சுக்கிரன். கவிப்பில் புத்ரகாரகன் குரு. கவிப்பில் குரு இருப்பதால் ஆண் குழந்தை இருக்காது. உதயாதிபதி சனி 6ல் மறைவு. எனவே சனியின் காரகத்துவமும் இல்லை. நிகழ்வைக் குறிக்கும் ஆருடத்தில் பெண் கிரகமான சுக்கிரன் உள்ளார். ஆகவே *பிறந்தது ப...