அன்றாடம் நானும், ஜாமக்கோளும்*
*அன்றாட வாழ்வில் நானும், என்னோடு அற்புதம் நிகழ்த்தும் ஜாமக்கோளும்* குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய பதிவோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். இந்த பதிவு ஜாமக்கோள் பிரசன்னத்தின் ஒரு புதிய பரிமாணத்தை நீங்கள் பார்க்கலாம். பதிவு சற்று நீளமானது என்று படிக்க விரும்பாமல் நீங்கள் நகர்ந்து சென்றால் பிரபஞ்சம் காட்டும் அற்புதத்தை தெரிந்து கொள்ள முடியாது என்பது நிதர்சனம்.. நிதானமாக படித்து பாருங்கள் *கிரகங்களின் மாயாஜாலத்தை!*ஜாமக்கோளின் வண்ணக்கோலத்தை!* சிறிது கவனித்து பார்த்தீர்கள் என்றால் உங்களது வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறுகிறது என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்து போவீர்கள். அழகிய வண்ணச் சிறகால் வட்டமிட்டுக் கொண்டு செல்லும் பட்டாம்பூச்சி போல ஜாமக்கோளும் உங்கள் கையில் வந்து அமர்ந்து தன் அற்புதத்தை காட்டும் விதத்தைக் கண்டு ரசிப்பீர்கள். வாருங்கள்! படியுங்கள்.! * ரசிக்கலாம்! களிக்கலாம்!* *கிறங்கலாம்!* *நீங்களும் ஜாமக்கோளும்* ஜாமக்கோள் நமது அன்றாட வாழ்வில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் சுட்டிக்காட்டுவது இப்பதிவு. ஜாமக்கோள...