அன்றாடம் நானும், ஜாமக்கோளும்*
*அன்றாட வாழ்வில் நானும்,
என்னோடு அற்புதம் நிகழ்த்தும் ஜாமக்கோளும்*
குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய பதிவோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
இந்த பதிவு ஜாமக்கோள் பிரசன்னத்தின் ஒரு புதிய பரிமாணத்தை நீங்கள் பார்க்கலாம்.
பதிவு சற்று நீளமானது என்று படிக்க விரும்பாமல் நீங்கள் நகர்ந்து சென்றால் பிரபஞ்சம் காட்டும் அற்புதத்தை தெரிந்து கொள்ள முடியாது என்பது நிதர்சனம்..
நிதானமாக படித்து பாருங்கள் *கிரகங்களின் மாயாஜாலத்தை!*ஜாமக்கோளின் வண்ணக்கோலத்தை!*
சிறிது கவனித்து பார்த்தீர்கள் என்றால் உங்களது வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறுகிறது என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்து போவீர்கள்.
அழகிய வண்ணச் சிறகால் வட்டமிட்டுக் கொண்டு செல்லும் பட்டாம்பூச்சி போல ஜாமக்கோளும் உங்கள் கையில் வந்து அமர்ந்து தன் அற்புதத்தை காட்டும் விதத்தைக் கண்டு ரசிப்பீர்கள்.
வாருங்கள்! படியுங்கள்.! *
ரசிக்கலாம்! களிக்கலாம்!*
*கிறங்கலாம்!*
*நீங்களும் ஜாமக்கோளும்*
ஜாமக்கோள் நமது அன்றாட வாழ்வில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் சுட்டிக்காட்டுவது இப்பதிவு.
ஜாமக்கோளில் கௌரி, ஜாம கிரகங்கள், ஆருடம், ஜாம கிரகம் பயணிக்கும் நட்சத்திரம், ஜாம வேளை ஆகியன எப்படி முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைப் பார்ப்போம்.
*இன்று 20/07/2022 புதன்கிழமை*
நேற்றைய தினம் அதிகப்படியான வேலையின் காரணமாக
நான் காலையில் 7 40 மணிக்குத் தான தூங்கி எழுந்தேன்.
தூக்கத்திலிருந்து கண்விழித்து எனது மொபைலை எடுத்து பார்த்தேன்.
அன்னை காமாட்சியை தரிசித்து விட்டு முக்கியமான தகவல் ஏதேனும் உண்டா? என்று *வாட்ஸ் அப்* பைப் பார்த்தேன்.
டிஸ்கஷன் குரூப்பில் ஒரு பிரசன்னம் போடப்பட்டிருந்தது.
பிரசன்னத்தில் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கப்பட்டு இருந்தது. இந்த மரணத்தில் மர்மம் உள்ளதா? என்று.
வாட்ஸ் அப்பை மூடி வைத்து விட்டேன்.
என்னடா இது? காலையில் எழுவதற்கு முன்னரே ஒரு நல்ல செய்தியாக இருக்கக் கூடாதா? என்று சலிப்பு.
சரி! இறைவன் ஏதோ ஒன்றை செய்ய சொல்கிறான் என்று....
உடனே யோசிக்க தொடங்கினேன். நேரமோ 7.40மணி.
இப்போது என்ன ஜாம வேளை ஆக இருக்கும்? என யோசித்தேன் இரண்டாவது ஜாமம்.
*ஏழரை டு ஒன்பது எமகண்ட வேளை*
.
இந்த நேரத்தில் ஒரு ஜாதகமோ அல்லது ஒரு பிரசன்னமோ பார்க்க கூடியதாக இருப்பின் அது கட்டாயம் ஒரு இறந்தவர் ஜாதகமாகவும் அல்லது மரணம் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் பிரசன்னம் அமைந்திருக்கும் என்பது தெளிவு என்பது புரிந்தது.
இது முதல் நிகழ்வு.
ஒரு நாள் தொடங்கும் போது இன்றைய நாளின் முதல் ஜாமத்தில் ஜாம கிரகங்கள் எப்படி அமைந்திருக்கின்றன? அதற்கேற்ற செயல்பாடுகள் எப்படி நடக்கும்?என்பது ஏற்கனவே திட்டமிட்டப்பட இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
*இன்றைய நாள் புதன் கிழமை இவர் வார நாதன் ஆவார்.*
எனவே இன்றைய தினம் புதனின் கட்டுப்பாட்டின் கீழ் அவரது தலைமையில் ஆதிக்கம் மிகுந்த நாளாகவும் தசா நாதனைப் போல செயல்படுவார் என்பது தெரிந்தது.
மற்ற ஜாமக்கோள்களும் இவரது கட்டுப்பாட்டின்படி. தான் செயல்படும் என்பதும் ஐயமற தெரிந்நது.
இன்றைய நாள் பொழுது புதனின் தலைமையில் மற்ற ஜாம கிரகங்கள் அந்தந்த ஜாமவேளைக்குரிய அதிகாரிகளாக இருந்து தனது காரகத்தையும் குணாதிசயங்களையும் பண்புகளையும் வெளிப்படுத்துவார்கள்.
வார நாதன் புதன் முதல் ஜாமத்தில் மீனத்தில் நீசம் அடைகிறார்.
அப்போது அவர் வலுவிழந்து தனது குணங்களை பண்புகளை காரகத்துவங்களை வெளிப்படுத்த முடியாமல் மயக்க நிலையில் இருப்பார்.
ஆனால் அவரது 4,7க்குரிய ஆதிபத்தியங்கள் வேலை செய்யும்.
இரண்டாவது ஜாமத்தின் சுக்கிரன் இரண்டாவது ஜாம வேலைக்குரிய அதிகாரியாக இருந்து தனது காரகங்களையும் பண்புகளையும் ஆதிபத்தியங்களையும் வெளிப்படுத்துவார்.
அதே சமயம் *இரண்டாவது ஜாமம் எமகண்ட வேளை என்பதால் மரணம் பற்றிய பிரசன்னத்தை பார்க்க நேர்ந்தது.*
பின்னர் ஒன்பது மணிக்கு வேலைக்கு செல்லும் துணைவியாரை பள்ளிக்கு அனுப்பி விட்டு நான் குளிக்க சொல்லலாம் என்று துணிமணிகளை எடுத்து வைத்தேன்.
*இப்போது 3வது ஜாமம்*
மூன்றாம் ஜாமத்தில் அதிகாரம் செலுத்தும் *ஜாம கிரகமாக சனி பகவான்.* அவரது காரகத்துவம் இங்கே கழிவறை, குளியலறை போன்றவற்றை செயலாக்கம் செய்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.
இப்போது நான் காலை கடன்களை முடித்துவிட்டு சவரம் செய்தேன். அதன் பின் குளித்தேன்.
என்னை சுத்தப்படுத்திக் கொண்டு என் தேகம் என்னும் நாடி தேவதைகளுக்கு வணக்கம் செலுத்த விபூதியைப் பூசினேன்.
சவரம் செய்த போது ஜாம கிரகம் சனிபகவான் தனுசு ராசியில் இருக்கிறார்.
*முகத்தில் தாடி*. இது சனியின் ஆதிக்கத்தை காட்டும் .
அந்த தாடியை சவரம் செய்யும்போது ரேசர் பிளேடு துணையோடு சவரம் செய்கிறேன்.
பிளேடு என்பது கூர்மையான ஒரு சிறிய ஆயுதம்.
*ஆயுதத்துக்கு காரகர் செவ்வாய்* . அந்த செவ்வாயின் காரகமான பிளேடு *முகம் என்னும் சுக்கிரனை* வெளிப்படுத்த முகத்தை மறைத்த ( *சனியை)* தாடியை தனுசு மனைக்கு ஏழாம் வீட்டில் இருந்து செவ்வாய் தனது ஆயுதத்தால் வலித்து எடுத்து விடுகிறது.
முகம் பிரகாசம் அடைந்து விட்டது.
*சனி வெளியேறியது*
அதே சமயம் செவ்வாய் சனியை வெளியேற்றியது.
ஜாம கிரகம் சனி தனுசு வீட்டில்.
அதற்கு நேர் எதிரில் ஏழாம் வீட்டில் செவ்வாய். அங்கு இருந்து இந்த செயலை செவ்வாய் நடத்தியது.
*தனுசு வீட்டில்*
*உத்திராடம், பூராடம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள்* இவைகளைக் கடந்து தான் இந்த ஜாமம் நடத்தப்படுகிறது.
இத்தனை நிகழ்வுகளும் 9:30 மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாக நடந்து முடிந்து விட்டது. மூன்றாவது ஜாமம் தனுசு ராசியில் ஒரு மணி நேரத்துக்குள் இந்த ராசியை கடப்பதற்கு உள்ளாக சனியும் செயல்பாடுகளையும் ஏழாம் பார்வையாக பார்த்து செவ்வாயின் செயல்பாடுகளும் இங்கு நிகழ்த்தப்பட்டது சுக்கிரனின் அலங்காரம் என்ற நிலைப்பாடு பூராடம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது.
*சூரியனின் நட்சத்திரம் உத்திராடம்* ஆரம்பிக்கும் போது ஆன்மீக செயல்பாடு ஆரம்பித்துவிட்டது .
இறை பாடல் அங்கே ஒலித்துக் கொண்டிருந்தது விஷ்ணு சகஸ்ரநாமம் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது.
*மூல நட்சத்திரம் கேதுவின் செயல்பாடும் அங்கே மேலோங்கிக் கொண்டிருந்தது.*
இதற்கு இடையே ஒரு போன் கால் வர கம்ப்யூட்டர் சரிபார்ப்பு செய்ய வருகிறேன் என்று எதிர்முனையில் இருந்து சொல்லப்பட்டது.
3 வது ஜாமத்தின் ஒரு மணி நேரம் கடந்த பின்னர் இந்த போன் கால் வந்தது.
*இப்போது விருச்சிக ராசியின் இறுதி நிலையில் கேட்டை நட்சத்திரம்* இருக்கிறது. இது புதனின் நட்சத்திரமாகும்.தகவல் தொடர்பை ஏற்படுத்தி விட்டது.
கேட்டைக்கு அடுத்ததாக *அனுஷம். இது சனியின் நட்சத்திரமாகும்* பின்.
விசாகம் நான்காம் பாதம் அந்த ராசியில் இருக்கிறது.
இதற்குள்ளாக கம்ப்யூட்டருக்கு உரிய பணியாள் வந்துவிட்டார் சனியின் செயல்பாடு துவக்கம். Computer பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு பார்க்க வேலை நடந்து. கொண்டு இருந்தது.
இப்பொழுது *ஜாம கிரகமான சந்திரன் இந்த ஜாமத்தில் தனது வேலையை துவக்குகிறார்*
.
*இந்த ராசியில் சந்திரன் நீசம்.*
காலை மணி 10.15 நிமி.
எனக்கோ நல்ல பசி.
நான் இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை.
சந்திரனின் காரகமான உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது.
அவர் நீசநிலையை அடைந்திருப்பதாலோ என்னவோ
நான் சாப்பிடச் செல்ல முடியவில்லை. காலை உணவு எடுக்கவில்லை.
அதே சமயம் காய்கறிகளால் செய்யப்பட்ட சூப். சாப்பாட்டு மேசையில் இருந்தது. அதை எடுத்துக் குடித்தேன். வந்தவருக்கும் இந்த காய்கறி சூப்பை கொடுத்து குடிக்க செய்தேன்.
சந்திரனின் காரகத்துவம் வேலை செய்து விட்டது.
சரி பார்ப்பு பணியும் நடந்து முடிந்தது. கம்ப்யூட்டரின் பழுது நீக்கப்பட்டது கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்தது. இப்போது அதற்கான கட்டணத்தை நான் எவ்வளவு? என்று கேட்டு கொடுத்தேன் அவர் நானூறு என்றார். ஏதாவது குறைக்க முடியுமா என்று கேட்பதற்கு சரி 300 ரூபாய் கொடுங்கள் என்றார். சரி என்று *gpay* 300 ரூபாய் அனுப்பி விட்டேன்.
விசாக நட்சத்திரம் குருவின் காரகம் பணம் மிகச் செயலாக்கம் நடந்து முடிந்தது.
*இப்போது மணி 11.05.*
நான்காவது ஜாம வேளை ஆரம்பித்து அரை மணி நேரம் ஓடிவிட்டது.
வந்தவர் வேலையை முடித்துவிட்டு சென்று விட்டார். ஜாம கிரகமான சந்திரன் இப்போது துலாம் ராசிக்கு வந்துவிட்டது. *சந்திரனின் நீசநிலை மாறிப்போனது* . காலை உணவு தான் எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் ஒரு அரை மணி நேரம் அல்லது 3/4 மணி நேரம் கழித்து மதிய உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று யோசனை செய்துவிட்டு இருந்தாலும் கொஞ்சம் உடலுக்கு சக்தி வேண்டும் என்று டைனிங் டேபிளில் மாம்பழம் இருந்தது. அதனை எடுத்து நான் காலை உணவாக சாப்பிட்டேன்.
துலா ராசியின் இறுதி பகுதியில் விசாக நட்சத்திரத்தின் 3,2, 1 பாதங்கள் உள்ளன. அது குருவின் சாரமாகும். இந்த வேளையில் நான் குருவின் ஆதிக்கம் மிக்க அதே சமயம் சந்திரனின் காரகமும் ஆன *மாம்பழம்* *பழங்களை* உணவாகக் கொண்டேன்.
அதன் பிறகு தாக சாந்திக்காக நீர் அருந்தி விட்டேன்.
சரி இனி ஒரு மணி நேரம் கழித்து மதிய உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று இப்போது ஜாம கோளைப் பார்க்கலாம் என்று எனது கைபேசி எடுத்துப் பார்க்கச் சென்றேன்.
*சுவாதி நட்சத்திரம் ராகுவின் சாரம்* மீண்டும் காலையில் பார்த்த அதே பிரசன்னம் நினைவக்கு வந்தது.
*இப்போது மணி 11:55* ராகு காலத்தை நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
புதன்கிழமை காலையில் 12 மணி முதல் ஒன்றரை மணி வரை *விஷகௌரி* ஆரம்பம்.
மேலோட்டமாக பார்த்துவிட்டு மீண்டும் அதனை மூடி வைத்து விட்டேன்.
ஏதோ தடையை காட்டுகிறது என்று புரிந்து கொண்டு இன்று காலையில் இருந்து நாம் செய்த செயல்பாடுகள் அந்த நேரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் பிரசன்னம் ஜாமக்கோள் நம்மோடு எவ்விதம் உறவாடுகிறது என்பதை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அது சம்பந்தமான செயல்பாட்டில் ஈடுபடலாம் என்று இருந்தேன்.
அந்தச் செயலும் உடனடியாக செய்ய முடியவில்லை. தடைதான்.
சரி என்று மாலை வேளைக்கு பின்னர் ஐந்தரை மணிக்கு மேல் இந்த பணியை செய்யலாம் என்று தள்ளி வைத்து விட்டேன்..
இதற்கு இடையில் எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவளை அருகில் இருந்து கவனிக்க வேண்டியதாயிற்று.
1 மணிக்கு மதிய ஆகாரம் தர வேண்டும்.அவளுக்கு வெறும் கஞ்சி தான்.
அவள் சற்று சோர்வாக இருப்பதால் நீரில் உப்போடு சர்க்கரை கலந்த
நீரை பருகச் செய்து அவளை உறங்க வைத்தேன். அவ்வளவு சோர்வு.
அதனை நீங்குவதற்காக இதனை செய்தபோது 3.15மணி.
3.00 மணியிலிருந்து 4:30 வரை *அமுத கௌரி*
சந்திரனின் ஆதிக்கம் ஆகும் .சிறிய அளவு வெறும் நீரும் மருந்தாக மாறி உடலைத் தேற்றி விடும் தன்மை இந்த அமுத கௌரிக்கு உண்டு.
மூன்று மணிக்கு உறங்கியவள் நாலே முக்கால் மணிக்கு மேல் தான் எழுந்தாள். கண்விழித்த போது உடல் சோர்வு அயர்வு நீங்கி விட்டது என்று சொன்னாள். இது *அமுத கௌரியின் அற்புதமாகும்.*
இதற்குப் பின்னர் எனது துணைவியார் பணியில் இருந்து வந்து விட்டார்.
அவள் அருகே இருந்து மகளைக் கவனித்துக் கொண்டார்.
சரி. எனக்கு இப்போது இடைவேளை.
இப்போது
நான் இந்த பதிவு செய்யலாம் என்று என்னை வேறு விதமாக திருப்பி விட்டது அதற்குப் பின்னர் நான் மீண்டும் அந்த பணியை ஆரம்பிக்கும் போது *மணி 6. 25.*
இப்போது பணியை நான் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது மணி 7. 25. நான் காலண்டர் அட்டையைப் பார்க்கிறேன். அந்த நேரத்தில் *கௌரி உத்தி கெளரி* நடந்துகொண்டிருந்தது.
இந்த கௌரி *சூரியனுடையது.*
ஆன்மீக சம்பந்தப்பட்ட ஜோதிடமான விஷயத்தை பதிவு செய்ய முடிந்தது.
*இரவுப் பொழுது*
இப்பொழுது ஜாம வேளை முதலாம் ஜாமம் . ஜாம கிரகம் புதன் மீனத்துக்கு வந்து விட்டார். அவரது செயல்பாடுகள் ஜோதிட சம்பந்தப்பட்ட விஷயங்கள் இதனை கைப்பேசியிலே நான் பதிவு செய்து கொண்டிருந்த வேலை *புதனின் காரகத்துவங்கள்* அது இப்போது வேலை செய்து விட்டது என்பதை நினைக்கும் போது கிரகங்களின் செயல்பாடுகள் நமது அன்றாட வாழ்வில் எவ்விதமாக ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது....பலத்த ஆச்சரியம் தான் ஏற்பட்டது.
என்னதான் நாம் மிகப்பெரியதாக வல்லமையாளராக இருந்தாலும் இந்த பூமியில் நவநாதர்கள், நட்சத்திரங்கள், ஜாமங்கள் அது தொடர்பான பிறவற்றை பார்க்கும் போது அவர்களின் தொடர்பு நம்மை எப்படி ஆட்சி செய்து வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். அவர்களுக்கு தலை வணங்கி இதனை உணர்த்திக் காட்டிய பிரபஞ்சம், அன்னை ஸ்ரீகாமாட்சி அம்மன், சித்தபுருஷர்கள், ஞானியர் என்பதையும் உணர்ந்து கொண்டேன். இப்படித்தான் அனைத்து மக்களின் வாழ்விலும் கிரகங்களின் பங்கு அளப்பரியும் விதமாக செயலாற்றுகிறது.என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
*வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!*
*கிரகங்களின் மாயாஜாலம்* *ஜாமக்கோளின் வண்ணக் கோலம்!*
நன்றி! வணக்கம்!
*திரு.S.ஷண்முகானந்தம்*
*M.A.B.Ed. RTD HM* *பொள்ளாச்சி*
*94437 28932*
*அன்றைய ஜாமகிரக நிலைகள் மற்றும் கிரகங்களின் கோட்சாரம்*👇🏻
வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!*





Comments
Post a Comment