மறுமணம் சார்ந்த பிரசன்னம்*
*கிரகங்களின் மாயாஜாலம்*
*ஜாமக்கோளின் வண்ணக் கோலம்*
சித்தர் போற்றி! சிவம் போற்றி! எல்லாம் வல்ல தாயே போற்றி! நவநாதர்கள் போற்றி!
என் அகம்தனில் எழுந்தருளி வாசி குதிரையில் அமர்ந்து நல்வாக்கினை அருள்வீரே!
*இன்றைய ஜாமக்கோள் பிரசன்னம்*
*மறுமணம் சார்ந்த பிரசன்னம்*
துபாயிலிருந்து
வாடிக்கையாளரின் வினா:
*தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா?*
ஆம் எனில்சொந்தத்திலா? அன்னியத்திலா?
அதற்காக போடப்பட்ட பிரசன்னம் இது.
உதயம் மிதுனம்
ஆருடம் உதயத்திற்கு ஒன்பதில் இருக்கிறது.
கவிப்பு 5ல்
கவிப்பு குருவை கவித்திருக்கிறது.
ஆருடத்தை நோக்கி இரண்டாம் அதிபதி சந்திரன் வருகிறார்.
*பிரசன்னத்தின் பதில்*
ஆம்.
சொந்தத்தில் மணம் முடிப்பார்.
பிரசன்ன விளக்கம்
உதயத்தை நோக்கி புதன் வருகை. திருமணம் சார்ந்த சிந்தனை.
ஆரூடம் 9ஆம் இடம். அதாவது திருமணத்தைக் குறிக்கும்.
ஆரூடத்தை நோக்கி 2ஆம் அதிபதி சந்திரன் வருகிறார்.
இரண்டாமிடம் புதிய நபர் வருகை.
அதன் அதிபதி சந்திரன் என்பதால் தாய் வழி சொந்தத்தில் திருமணம் முடியும்.
கவிப்பு ஐந்தாமிடத்தில் காதல் மனம் சிந்தனை
நமது எண்ணங்களே பிரசன்னத்தின் காட்சி ஜாமக்கோளின் வண்ணங்களே
அதன் அத்தாட்சி.
.... மீண்டும் இன்னொரு ஜாலத்தில் சந்திப்போம்!....
.... *ஜாலங்கள் தொடரும்*
.jpeg)
Comments
Post a Comment