ஜாமக்கோள் பிரசன்னம் பாடம் 2
*Lesson2* *ஜாம கிரகங்களின் பெயர்கள்* ஜாம கிரகங்கள் மொத்தம் எட்டு. அவற்றின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கதிர் - சூரியன் சேய் - செவ்வாய் பொன் - குரு மால் - புதன் புகர் - சுக்கிரன் மந்தன் - சனி மதி - சந்திரன் பாம்பு - ராகு கேது ஜாமங்கள் மொத்தம் எட்டு ஒரு ஜாமம் என்பது ஒன்றை மணி நேரமாகும். ஒரு நாளில் 24 மணி நேரத்தை இரண்டு பொழுதாக பகல் இரவு என பிரிக்கப்பட்டு பகலுக்கு 8 ஜாமங்களாகவும் இரவுக்கு 8 ஜாமங்களாகவும் பிரிக்கப்படுகிறது. சூரிய உதயம் காலை 6 மணி என கொண்டால் அதே வேளையில் இருந்து ஜாமம் துவங்கும். முதல் ஜாமம் காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஜாமம் காலை ஏழரை மணி முதல் 9 மணி வரை நடைபெறும். மூன்றாவது ஜாமம் 9 மணி முதல் 10 30 மணி வரை நடைபெறும். இவ்வாறாக பகல் வேளையில் எட்டு ஜாமங்களாக மாலை 6 மணி வரை நடக்கும். பின்னர் மீண்டும் மாலைப் பொழுதிலிருந்து மறுநாள் அதிகாலை 6:00 மணி வரை 8 ஜாமங்கள் நடைபெறும். .......ஜாலம் தொடரும்