காணாமல் போனவர் பற்றிய பிரசன்னம்
குருவே சரணம்
காணாமல் போனவர் பற்றிய பிரசன்னம்
7.12.2012 அன்று மதியம் 12.36 மணியளவில் போடப்பட்ட பிரசன்னம்
எனது மருமகள் ஸ்ரீலேகா நேற்று இரவு 7 மணி முதல் காணவில்லை (லெட்டர் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்) அவர் எங்கு உள்ளார் திரும்பி வருவாரா என மாமியார் கேட்கிறார் அவருக்காக போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம்
உதயம் விழுந்த இடம் மிதுனம்
உதயாதிபதி புதன் ஆட்சியாக உள்ளார்.
உதயத்தில் இருந்து ஆரூடம் 6ம் இடம்.
விருச்சிகம் ராசி.
வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக (சண்டை) வீட்டைவிட்டு சென்றுள்ளார் என்பது பொருத்தமாக உள்ளது.
கவிப்பு 8ம் பாவகத்தில்.மகர ராசியில். இது காணாமல் போன பிரசன்னம் என்பதை தெளிவாகக் கூறுகிறது.
2ம் இடத்தின் அதிபதி சந்திரன் கவிப்பில் மாட்டியுள்ளார்.
குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.
மனசஞ்சலம் அடைந்து இவ்வாறான முடிவு எடுத்ததை காட்டுகிறது
உதயம் கெடவில்லை.
உதயாதிபதி புதன் உதயத்தை தொடுகிறார்.
ஆரூடம் கெடவில்லை. ஆரூட அதிபதி செவ்வாய் 4ம் இடத்தை தொடர்பு கொள்கிறார்.தாய்வீட்டுக்கு செல்வார் அல்லது சகோதரன் வீட்டுக்கு செல்வார் என்று பிரசன்னம் கூறுகிறது
4ம் இடத்தில் செவ்வாய் உள்ளதால் காவல் துறை உதவி கோர அறிவுறுத்தப்பட்டது.
3 அல்லது 5 நாட்களில் தாய்வீட்டுக்கு வந்துவிடுவார் என்று கூறி பிரசன்னம் கூறப்பட்டது.
நிகழ்வு நடந்தது என்ன?
பெண் காணாமல் போனது மும்பையில். மன்னார்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து சேர 4 நாட்கள் ஆனது.
சனிக்கிழமை வந்தார் என தகவல்
கிடைத்துள்ளது
வாழ்க பிரசன்னம்
நவ கிரகங்களுக்கு நன்றி
நல் வார்த்தை கூற வைத்து என்னை பணித்த என் குருநாதருக்கும் சக நண்பர்களுக்கும் ஷண்முகாந்தம் அய்யா அவர்களுக்கும்
மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments
Post a Comment