கவிப்பு கவித்த ஜாம கிரகத்தைக் கொண்டு எந்த விஷயத்தை நாம் தேர்ந்தெடுப்பது?
கவிப்பு கவித்த ஜாம கிரகத்தைக் கொண்டு எதை நாம் தேர்ந்தெடுப்பது?
வாடிக்கையாளர் கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டார். வந்தவரின் நோக்கம் என்னவாக இருக்கும்?
அதை எப்படி தெரிந்து கொள்வது?
இதனைக் கண்டுபிடிக்க பிரசன்னத்தில் ஏதேனும் வழி உள்ளதா?
நிச்சயமாக உண்டு.
அப்போது போடப்பட்ட பிரசன்னம் இது.
இந்த பிரசன்னம் என்ன சொல்கிறது ?
அதனை இப்போது பார்க்கலாம்.
அப்படி பார்க்கும் போது
*உதயம் மிதுனம்*
ஆருடம் உதயத்துக்கு 7ல் தனுசு
*உதயத்துக்கு 6ம் வீட்டில் கவிப்பு விருச்சிகத்தில்.*
வாடிக்கையாளர் கேள்வி கேட்காத போது
கவிப்பு ஒரு பிரசன்னத்தின் ரகசியத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கும்.
அந்த வகையிலே கவிப்பு விருச்சிகத்தில் ஆறாம் பாவத்தில் இருப்பதைக் கொண்டு வாடிக்கையாளர் ஆறாம் பாவத்தில் உள்ள செய்திகளைப் பற்றி கேட்க வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆறாம் பாவகம் என்பது கடன், நோய், எதிரி என்று மோசமான பலன்களை சொல்வதாக இருந்தாலும் அதில் உள்ள சிறப்பான நல்ல பலன் எது என்றால் வேலை தேடுவது வேலை கிடைப்பது என்ற ஒரு நிலை அதிலே உள்ளது.
*இதில் எதை நாம் தேர்ந்தெடுப்பது என்றால்* கவிப்பு கவித்த ஜாம கிரகத்தைக் கொண்டு இதை உணரலாம்.
இந்த பிரசன்னத்தில் கவிப்பு 7 மற்றும் பத்தாம் பாவத்துக்குரிய அதிபதியான குருவை கவித்து இருக்கிறது.
அவ்வாறெனில் ஏழாம் பாவகம் திருமணம், மனைவி, கூட்டாளி பற்றியும் கூட்டு தொழில் பற்றியும், பத்தாம் பாவகம் சுய தொழில், வேலை தொழிற்சார்ந்த அமைப்பு, மாமியார் பற்றி கேட்க உள்ளார் என்று கூறலாம்,
ஆனால் மிக துல்லியமாக என்று பார்க்கும் போது ஆறாம் பாவத்தில் உள்ள கவிப்பு பத்தாம் பாவகம் மற்றும் ஏழாம் பாவகம் கொண்ட ஜாம கிரகமான குருவை கவிப்பதால் அந்த பாவத்திற்கு உரிய செயல்பாடும் ஜாம கிரகத்தினுடைய காரகமும் இங்கே வெளிப்படுத்தும் .
குருவின் காரகத்துவம் என்று போது பெரும்பணம், தனம், குழந்தை என்று எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையிலே பாவகத்தையும் காரகத்தையும் இணைத்து பார்க்கும் போது 10ம் பாவம் என்று வருவதால் தொழில் சார்ந்த நிலை.
அதே போல ஏழாம் பாவத்துக்குரிய மனைவி பற்றிய கேள்வி என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
ஏன் இங்கே குழந்தை என்ற நிலையை எடுக்கவில்லை என்றால் இந்த குருவின் காரகம் குழந்தையைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் அதற்கு கவிப்பு 5ஆம் பாவத்தில் இருந்தால் மட்டுமே சரியான விடையாக அமையும்.
ஆனால் 6 ஆம் பாவத்தில் கவிப்பு உள்ள து.
கவிப்பு கவித்தது 7,10 பாவம் மற்றும் அதன் அதிபதியான குரு.
இவைகள் எல்லாம் கொண்டு பாவகத்தையும் காரகத்தையும் இணைத்து பார்க்கும் போது ......
*வேலை சம்பந்தப்பட்ட விஷயம் 10 பாவம் அது சார்ந்த பணம் பிரச்சனை இதோடு தனது வாழ்க்கைத் துணையாகிய மனைவி 7ஆம் பாவம் பற்றிய கேள்வியும் இந்த வாடிக்கையாளர் கேட்க வந்திருக்கிறார் என்று நான் உறுதியாக சொல்லலாம்.
நடந்தது என்ன?*
*வெளிநாட்டில் தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட பணப் பிரச்சினை மற்றும் திருமணம் , மனைவியால் பிரச்சனை சம்பந்தமாக ... வாடிக்கையாளர் கேள்வி கேட்க வந்ததாக... என்று சொன்னார்.*
[என்ன அன்பர்களே! விளக்கம் போதுமா?
மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்
*என்றும் அன்புடன்*
*ரிஷி*
*திரு.S.ஷண்முகானந்தம் RTD Hm.*
*பொள்ளாச்சி*
*99657 28932*
*94437 28932*



Comments
Post a Comment