ஜாமக்கோள் பிரசன்னத்தின் 3 ஹீரோக்கள்

 ஜாமக்கோள் பிரசன்னத்தின் 3 ஹீரோக்கள் இருக்கிறார்கள்.



 ஒருவர் உதயம்.

 இரண்டாவது நபர் ஆருடம்.

 மூன்றாவது ....அவர் ஹீரோ என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஏன் கதையே இருக்காது. அவர்தான் கவிப்பு.


 கால ஓட்டத்தை கர்மாவை நிர்ணயம் செய்யக் கூடியவர் கவிப்பு. கவிப்பு என்பது ஒரு நிகழ்வின் பாதிப்பை தாக்கத்தை சேதாரத்தை நஷ்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்.

 கவிப்பு எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவம் நசிக்கப்படும்.

 கிட்டத்தட்ட கிரகணம் பிடித்த நிலை என்று சொல்லலாம். கிரகணத்தில் சிக்கிய பாவமும் கிரகமும்  செயலிழந்து போகும்.


ஜாதகத்தில் பாதகாதிபதி என்ன வேலையைச் செய்வார் என்றால் மரணத்திற்கு ஒப்பான கண்டத்தை துன்பத்தை ஏற்படுத்துவார். ஆனால் மரணம் இருக்காது.


 10 பாதகாதிபதி சேர்ந்தால் ஒரு கேது  ஆவார்.

10 கேது சேர்ந்தால்  ஒரு  அஷ்டமாதிபதி ஆவார் .

பத்து அட்டமாதிபதி சேர்ந்து இயங்கினால் ஒரு ராகு ஆகும்.

10 ராகு சேர்ந்தால் ஒருகவிப்பு ஆகும்.


மேற்கண்ட அனைவருமே தங்களது திசா காலகட்டத்தில் திசையை நடத்தும் போது கொடுமையான துன்பகரமான நிகழ்வையே ஜாதகருக்கு ஏற்படுத்துவார்கள்.

தாங்க முடியாத சொல்லவொண்ணாத கஷ்டத்தையே தருவார்கள்.

இவர்கள் தரும் கொடுமையான துன்பகரமான நிகழ்வுகளை ஒரு கவிப்பு செய்துவிடும்.


எனவே பிரசன்னத்தில் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு இணையான ஒரு வில்லன் என்று சொல்லக்கூடிய கவிப்பு அந்த நிகழ்வை சுவாரசியப்படுத்துவதற்கு தன் பங்கை ஆற்றிடக் கூட தயங்க மாட்டார்.

         ....... தொடரும் காலக்கண்ணாடி

Comments