Computer Hard disk காணவில்லை

 

கேள்வி 

வாடிக்கையாளர் திருமதி கலாவதி அவர்களின் மகளுடைய கம்ப்யூட்டரின்  ஹார்ட் டிஸ்கை காணவில்லை.

அது கிடைக்குமா? Time 4.53pm.




ஜாமக்கோள் பிரசன்னம் என்ன பதில் சொல்கிறது?




அதற்கு முன் இந்த கேள்வியை குழுவில் ஆய்வுக்கு கொடுத்த போது அவர்கள் தந்த பதில்களைப் பார்ப்போம்.

[31/12/2023, 1:46 pm] 

நபர் 1

🤴: கிடைக்கும்.7th house is getting stronger.

நபர் 2
🤴: வணக்கம் மேம் உதயத்தை நோக்கி பாம்பு வருவதால் கிடைப்பது தாமதமாகும் . உதயாதிபதி 11ல் மேலும்  ஆருடம் மற்றும் சந்திரன் 4ல் இருப்பதால் வீட்டிற்குள் தான் இருக்கும் .கவிப்பு 5ல் இருப்பதால் நீர் நிலைகளில் பக்கத்தில் அல்லது மறைவான இடங்களில் tv, pc , refrigerator பகுதியில் தேடிப்பாருங்கள்

நபர் 3

🤴: 👏👏 புத்தகங்கள் வைக்கும்இடம்  அல்லது ஜன்னல்கள் அருகில்.


கேள்வி கேட்டவர் பதில்

இதுவரை கிடைக்கவில்லை கிடைத்தால் இந்த சார்ட்டிற்கான பதிலை பகிர்கிறேன் 👍


நபர் 4

புத்தக அலமாரியில் இருக்கலாம்.



கேள்வி கேட்டவர் பதில்
மாலை 5.37 pm.

கிடைத்தது, கருப்பு நிற லேப்டாப் பை ஒன்றில் இருந்தது.. 

பதில் அளித்த அனைவருக்கும் நன்றி🙏

                =========================

இது எவ்வாறு நிகழ்ந்தது ?

காணாமல் போன பொருள் கிடைப்பதற்கு என்ன விதி பிரசன்னத்தில் இருக்கிறது அல்லது பொருள் கிடைக்காது என்றால் என்ன நிலைமையை பிரசன்னம் காட்டும்.

இப்போது பிரசன்னத்தை ஆய்வு செய்வோம்.


கேள்வி கேட்ட பிரசன்னத்தில் 

உதயம் விருச்சிகம்

ஆருடம் கும்பம் (17.00 டிகிரி)
உதயத்திற்கு நான்காம் வீட்டில்.


கவிப்பு மீனம் (13.00டிகிரி)
உதயத்திற்கு ஐந்தில் 


கவிப்பு கவித்த கிரகம் சந்திரன்

சந்திரன் கும்பம்
உதயத்திற்கு 4ல்

இதுதான் சார்ட்டின் முழு வடிவம்.


காணாமல் போன பொருள் என்றால் ஆருடம் 6, 8 ஆகிய இடங்களில் அமையும்.


அதேசமயம் அந்தப் பொருள் கிடைக்கும் என்றால்.....

 உதயத்தையோ ஆருடத்தையோ உதயாதிபதியையோ ஆருடாதிபதியையோ கவிப்பு கவித்திருக்காது. 

அவ்வாறு இல்லாமல் உதயத்தையோ ஆருடத்தையோ உதயாதிபதியையோ ஆருடாதிபதியையோ கவிப்பு கவித்திருப்பின்
காணாமல் போன பொருள் கிடைக்காது.

இதுதான் காணாமல் போன பொருள் கிடைப்பதற்கும் கிடைக்காமல் இருப்பதற்கான விதி.

சரி.

இந்த விதியை கொண்டு பார்த்தோமானால்....

ஆருடம் நான்காம் வீட்டில் தான் விழுந்திருக்கிறது.

மேலும் ஆருடம் 6, 8 இடங்களில் அமையவில்லை என்பதால் ....

எனவே பொருள் காணாமல் போகவில்லை என்பது உறுதியாகிறது.

சரி. அப்படி என்றால் என்ன நிகழ்ந்தது?
அதற்கும் பிரசன்னமே பதில் கூறுகிறது எப்படி?


 அதனை வெளிப்படுத்துவது  மறைந்துள்ள ரகசியத்தை வெளியே கொண்டு வந்து காட்டுவது கவிப்பு .

ஆஹா கவிப்பு என்று சொல்கிறது?
 கவிப்பு ஐந்தாம் வீட்டில் விழுந்து இருக்கிறது அது குருவின் வீடு மீனம்.
ஐந்தாம் வீடு ஆழ்மன சிந்தனை என்பதை சுட்டிக்காட்டும்.

கவிப்பு கவித்த கிரகம் சந்திரன்‌.
வேலையில் மூழ்கி இருந்த சமயம் தீவிரமான மன நிலையில் ஒரு சிந்தனையில் இருந்த போது கை தவறி ஞாபக மறதியாக வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டது என்பதை சந்திரன் சுட்டிக் காட்டுகிறார்.

அந்தப் பொருள் வீட்டிலேயே தான் இருக்கிறது என்பதற்கு அறிகுறியாக உதயம் ஸ்திரராசியில் விருச்சிகத்தில் அமைந்துள்ளது.

 ஆருடமும் மற்றொரு   ஸ்திர ராசியான கும்ப மனையில் விழுந்திருக்கிறது.அது உதயத்திற்கு நான்காம் வீடு.
 எனவே கை மறதியில் வைக்கப்பட்ட அந்த பொருள் வீட்டிலேயே தான் இருக்கிறது என்பதை இந்த இரண்டு ராசிகளும் சுட்டிக்காட்டுகிறது


 உதயத்தையோ ஆருடத்தையோ உதயாதிபதியையோ ஆருடாதிபதியையோ கவிப்பு கவித்திருக்கவில்லை.

மறதியாக வைக்கப்பட்ட இந்த ஹார்ட் டிஸ்க் கிடைக்கும் என்பது உறுதியாகிறது.

கண்ணுக்கு புலனாகாமல் மறைந்து இருக்கக்கூடிய இந்த ஹார்ட் டிஸ்க் வீட்டினில் எங்கே இருக்கிறது? என்பதை அடுத்த கேள்வி.

பொருள் கிடைக்கும் எனில் அந்த பொருள் இருக்கும் இடத்தைச்  சுட்டிக் காட்டுவது உதயத்தின் நான்காம் வீடு ஆகும்.

உதயத்தின் நான்காம் வீடு கும்பமனை கும்பமனை அது சனியின் வீடு.


கருப்பான இருள் நிறைந்த பகுதியில் பொருள் இருக்கிறது என்பதை முதலில் உணர்த்துகிறது.

துல்லியமாக அறிய வேண்டும் என்றால் ஆருடம் எந்த பாகையில் அமைந்திருக்கிறது அது நின்ற நட்சத்திர சாரம் என்ன என்பதை புற்று கவனித்தால் கவனித்தால் அந்த சாரநாதனுக்கு உரிய நிலையே பொருள் இருக்கும் இடத்தை அறிய முடியும் இங்கே ஆருடம் 17 பாகையில் இருக்கிறது அதாவது சுவாதி 3 பாதத்தை கடந்து சதயம் நான்காம் பாதத்தில் நுழையும் போது ஆருடம் அமைந்து இருப்பதால் .....

மிருதுவான, தொட்டால் மென்மையான, அதேசமயம் கருப்பு நிறமுடைய, மூலிகைப்பூ கொத்து போல சுருண்டு காணும் அமைப்பு கொண்ட இடத்தில் இந்த ஹார்ட் டிஸ்க் இருக்கும் என்பது உறுதி.

பெட்டியாக இருக்கலாம். அல்லது
அது ஒரு மென்மையான மிருதுவான ஹேண்ட் பேக் ஆக கூட இருக்கலாம்.

இந்த பகுதியில் தேடிப் பார்த்தால் அதுவும் மகளுடைய தாயார் அல்லது அத்தை ஆகியவை கொண்டு தேடினால் அப்பொருள் நிச்சயமாக கிடைத்துவிடும்.

நடந்தது என்ன?

கேள்வி கேட்டவரான கலாவதி அவர்கள் தனது மகளுக்காக இந்த பொருளைத் தேடிப் பார்த்திருக்கிறார்.

அப்பொருள் கிடைத்துவிட்டது என்று பதிலும் அளித்தார்.
எங்கே இருந்தது என்றால் லேப்டாப் வைக்க கூடிய கருப்பு நிறப் பையில் இருந்தது என்று பதில் அளித்து இருக்கிறார்.

என்ன ஒரு அதிசயம்! அற்புதம்!

கிரகங்களின் மாயாஜாலம்! ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!!

        .......... ஜாலம் தொடரும்...

அடுத்தது ஒரு புதிய ஜாமத்தில் ஜாலத்தில் நாம் சந்திப்போம்.

நன்றி 
வணக்கம்.
என்றும் அன்புடன் ரிஷி 

Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்