ஜாமக்கோள் பிரசன்னம்*அறிமுகம்
சித்தர் போற்றி! சிவன் போற்றி!
எல்லாம் வல்ல வாலைத் தாயே போற்றி!
நவநாதர்கள் போற்றி! போற்றி!
என் அகம்தனில் எழுந்தருளி வாசிக்குதிரையில் அமர்ந்து நல்வாக்கினை அருள்வீரே!
*ஜாமக்கோள் பிரசன்னம்* *அறிமுகம்*
பூமியின் வெளிபரப்பும் அதன் மேல்படும் கதிர்களையும் ஆராய்ந்து ஜீவராசிக்கும் அண்டவெளிக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் வானமண்டலத்தில் ராசிமண்டலங்களும் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரங்களும் இருப்பதை ஆராய்ந்து சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சஞ்சாரம் செய்வதை உணர்ந்தார்கள். நம் முன்னோர்கள் விட்டுசென்ற வானவியல் கணிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பஞ்சாங்க உறுப்புக்களுள் திதி, யோகம், கரணம், அயனம் போன்ற கால அளவுகளை ஆராய்ந்து சிறந்த ஒரு வான சாஸ்திரத்தை உருவாக்கினார் ஆரியபட்டர்.
ஆரம்ப காலத்தில் மனிதன் வழிப்போக்கில் சென்று கொண்டிருக்கும்போது எந்த திசையில் இருந்து கேள்வி கேட்கிறார்களோ அந்த திசையையும் அதற்கு எதிர் திசையில் உள்ள சகுனத்தையும் வைத்து பலன் சொல்லி வந்தார்கள்.
மற்றும் தனக்கு முன்னாள் உதயமாகும் நிமித்தத்தை வைத்தும் பலன் சொல்லி வந்தார்கள்.
எட்டு திக்குக்குள் எட்டு ஜாமத்தை வைத்து அமைத்து அதனுள் உதயத்தை ஓடவிட்டு உதயத்திலிருந்து சூட்சும ஆரூடத்தை எடுத்து பலன் சொல்லிவந்தார்கள்.
நிமித்த ஆரூடம்,
சகுன ஆரூடம்,
பறவைகள்,
கௌரி,
பஞ்ச பட்சி,
தொடுகுறி சாஸ்திரம்
இது போன்ற பல பிரசன்னங்களையும், யுக்திகளையும் ஆராய்ந்து அரசர்கள் மற்ற நாட்டின் மீது படையெடுத்து செல்லவும் , மற்ற நாட்டினர் எப்போது படையெடுப்பார்கள் என அறியவும் பயன்படுத்தி வந்தார்கள்.
சங்க காலத்தில் புறநானூறு சிலப்பதிகாரத்தில் பிரசன்னம் இருப்பதையும், சீவக சிந்தாமணியில் பிரசன்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் தெளிவாக பார்க்கிறோம்.
*வடமொழியில் ராவணேஸ்வரன் இயற்றிய ராவண காவியத்தில்* ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
*சினேந்திர மாலை* யில் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றி தேவக்கோட்டையை சேர்ந்த ஜோதிடர்கள் சென்ற நூற்றாண்டில் நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் ஆய்வு நோக்குடன் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
மேலும், கல்யாணராமையர் , ஜோதிடக்கடல் வைத்தியநாதன், அல்லியேந்தல் அருணாச்சலம், திருப்பூர் S.கோபாலகிருஷ்ணன் போன்றோர் முறைபடுத்தி ஜாமக்கோள் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
ஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம் மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனைகள் எதுவானாலும் அதை ஆய்வு செய்யக்கூடிய கணித முறைகள் உண்டு.
கல்வி, படிப்பு, வேலை வாய்ப்பு,தொழிலில் வெற்றி தோல்வி, திருமணத்தை பற்றி,
குழந்தையை பற்றி, மகப்பேறு,
காணாமல் போனவர், தொலைந்து போன பொருள், உடல் நலம்,மரணம் இது போன்ற எந்த கேள்வி ஆனாலும் நடக்குமா? நடக்காதா? எப்போது நடக்கும்? என்பதை துல்லியமாக கூறமுடியும்.
நாங்கள் இதுவரை பார்த்த பல பிரசன்னங்களின் சாராம்சங்களை இந்த தளத்தில் தொடராக எழுதிக்கொண்டு வருகிறோம்.
*ஜாமக்கோள் பிரசன்னம் ஓர் அறிமுகம்*
ப்ரசன்னம் என்றால் என்ன?
ப்ரசன்னம் என்ற வார்த்தைக்கு கேள்வி மற்றும் தற்போதைய நிலை என்று பொருள்.
கேள்வி எழும் நேரத்தில் ஜாமகிரகங்களை அடிப்படையாக கொண்டு பலன் தீர்மானிப்பதே ப்ரசன்னம் ஆகும்.
ப்ரசன்ன நேரம் ஆனது , நடந்து கொண்டிருக்கும் கோச்சாரத்தின் மற்றும் கேள்வியின் சாராம்சத்திற்கு ஏற்றவாறு நிமிடத்துக்கு நிமிடம் மாறும், ஆனால் துல்லியம் மாறாது,
ஜோதிடத்திற்கு பெயர் போன கேரள மாநிலத்தில் இன்றும் ஜனன ஜாதகத்தை விட ப்ரசன்னத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் தான் இன்றும் கேரள ஜோதிடத்திற்கும், ஜோதிடர்களுக்கும் நல்ல பெயர் மக்களிடையே உள்ளது.
ஒரு உயிர் மண்ணில் பிறக்கும் நேரத்தில் கிரகங்களின் அமைப்பை கொண்டு கணிப்பது ஜாதகம். அதை கொண்டு வாழ்க்கையில் நடக்க இருக்கும் சம்பவங்களை அறியலாம். ஆனால் பிறந்த நேரம் தவறாக குறிப்பிட்டு இருந்தால், அந்த ஜாதகத்தின் கணிப்பு, பலன் அனைத்தும் தவறாகி விடும்.
ப்ரசன்னத்தில் இந்த தவறு நடக்க வாய்ப்பில்லை. மேலும் கீழ்கண்ட விஷயங்களுக்கு ஜனன ஜாதகத்தில் துல்லியமான பலன் காண முடியாது.
1, செய்வினை தோஷம்
2, ஆத்மாவின் நிலை / மரணத்துக்கான காரணம்
3, திருட்டு பொருள் பற்றி
4, குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் துர்சம்பவத்துக்கான காரணம்
5, காரிய வெற்றி / தடை,
6, ஜாதகத்தில் யோகங்கள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் இருப்பதன் காரணம்.
7, பூஜை/ஹோமங்களின் திருப்தியற்ற நிலை
என பல விஷயங்களுக்கும் / கேள்விகளுக்கும் ப்ரசன்ன ஜோதிடமே சிறந்த பலனை தரும்.
ப்ரசன்ன வகைகள்:
சோழி ப்ரசன்னம்,
தாம்பூல ப்ரசன்னம்,
தேவ ப்ரசன்னம்,
அஷ்ட மங்கள ப்ரசன்னம்,
ஹோரரி ப்ரசன்னம்,
ஜாமக்கோள் ப்ரசன்னம்
என்று பல வகை ப்ரசன்ன முறைகள் உள்ளன,
தேவைக்கு ஏற்றவாறு குடும்ப ப்ரசன்னம், திருமண ப்ரசன்னம்,
திருட்டு ப்ரசன்னம், காணாமல் போனவர் ப்ற்றிய ப்ரசன்னம் ஆகிய இன்னும் பல ஜோதிடரின் பரிந்துரைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
மேலும் ஜாமக்கோள் தொடர்பான பயிற்சிகளை ஸ்ரீப்ரம்மரிஷி ஜோதிட மையம் அளித்துக்கொண்டிருக்கிறது.
பயிற்சி குறித்த விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
S.ஷண்முகானந்தம்M.A.B.Ed., RTD HM
பொள்ளாச்சி.99657 28932
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Instagram
லேபிள்கள்: *ஜாமக்கோள் பிரசன்னம்*

Comments
Post a Comment