ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்





இந்த ஜாதகம் ஆய்வு செய்தபோது போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம்.


 உதயம் மேஷம் 

ஆருடம் சிம்மம் 5ல்

கவிப்பு தனுசு ஒன்பதாம் இடத்தில்.

உதய அதிபதி செவ்வாய்  ஐந்தாம் இடத்தில்.

கவிப்பு கவித்த பாவம் 9ஆம் பாவம்.

இவைகளைக் கொண்டு பார்க்கும்போது இது *மறு மணத்தை பற்றிய பிரசன்னம்* என்பதைக் கூறுகிறது. 

இங்கு ஜாதகர் கேள்வி கேட்கப்படவில்லை.  அவர் மனதில் உள்ள சிந்தனையைப் பற்றி கூறும் இடம் 10-ஆம் இடம்.அது மகர மனை. அதன் அதிபதி சனி பகவான்  11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று பலமாக இருக்கிறார். ஏழாம் இடம்  மனைவி ஸ்தானம் அந்த அதிபதி சுக்கிரன் 12ம் இடத்தில்.வீடு கொடுத்த குரு பகவான் உதயத்துக்கு மூன்றில் மறைவு.எனவே இந்த ஜாதகர் மனைவியை  விட்டு பிரிந்து இருக்க வேண்டும். அது 12-ஆம் இடத்தில் உள்ள சுக்கிரன் மனைவியின் பிரிவு என்பதை காட்டுகிறது.

 சரி  களத்திரம் ஆகிய சுக்கிரன் 12ல் மறைவு பெற்றாலும் ஏழாம் அதிபதி வலுவிழந்த நிலையில், பதினொன்றாம் அதிபதியான சனி பகவான் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதும் கவிப்பு 9ஆம் இடத்தை சுட்டிக் காட்டுவதால் 9-ஆம் இடம் என்பது மறுமணத்தையும் குறிக்கும்.

கவிப்பு ஒன்பதாம் பாவத்தில் இருந்து எட்டாம் இடத்தில் உள்ள  பாம்பை கவித்திருப்பதால்  பெரும் துன்பம்,அவமானம் ஜாதகருக்கு நேர்ந்திருக்கும் என்பதை காட்டுகிறது. முதல் திருமணத்தால் ஏற்பட்ட அவமானம் துன்பம் பழி பாவங்களால் ஜாதகர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை காட்டுகிறது. காரணம் அந்த எட்டாம் இடம் செவ்வாயின் வீடான விருச்சிகம்.

அத்தோடு உதயத்தை நோக்கி புதன் வருவதால் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்தையே கேள்வியாளர் தனது சிந்தனையில் வைத்து ஜாதகம் பார்க்க வந்துள்ளார் என்பதை எடுத்துரைக்கிறது

நன்றி வணக்கம் ஷண்முகானந்தம் பொள்ளாச்சி. 

Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?