விக்கிரக_பிரசன்னம்*
*விக்கிரக_பிரசன்னம்*
*தேவபிரசன்னத்தில்* குறிப்பிட்ட பாவகத்திற்கு சுபகிரக பார்வை சுபத்தையும்,பாபகிரக பார்வை தோஷத்தையும் குறிப்பிடும்.
அது போல மற்ற பாவங்கள் *தோஷநிலை* பெற்றாலும்,லக்னத்திற்கு சுபகிரக பார்வை இருக்குமானால் தெய்வ விக்கிரகத்திற்கு *தோஷமில்லை* என அறிந்து கொள்ள வேண்டும்.
லக்னத்திற்கு பாவக்கிரக சேர்க்கை பார்வை இருக்குமாயின்,அந்த விக்கிரகத்திற்கு முறிவு, அசுத்தம் போன்றைவை உண்டாகியிருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் தேவ பிரசன்னத்தில் குறைபாடு களாக *விக்கிரம் சிதிலத்* தன்மை, பிரசாத குறைபாடு, துஷ்டர்களின் செயல்கள்,கோயில் பூஜை செய்வோரின் லட்சணம் போன்றவை தெய்வ பிரசன்னத்தால் அறிந்து கொண்டு அதற்கான பிராயச்சித்தத்தை லக்னத்திற்கு *எட்டாம் பாவகம்* மூலமாக அறிந்துக் கொண்டு,அதற்கான பரிகார பிராயச்சித்தங்களை தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக *ஒன்றிரண்டு* விஷயங்கள்!
1.பிரசன்ன லக்னத்திற்கு நான்காம் பாவகம் சனி நின்றாலோ,சனி தொடர்பு பெற்றாலோ, மண்டபம்,கர்ப்பக்கிரகம், மடப்பள்ளி போன்றவை பழுந்தடைந்தோ தேய்ந்துபோயோ இருக்கிறது என்பதை உணர்த்தும்.
2.ஒன்பதாம் பாவகத்தில் பாபர்களான சனியோ,செவ்வாயோ,
அல்லது சனி கேது சேர்க்கையோ,
அல்லது செவ்வாய் கேது சேர்க்கையோ இருந்தால்.... கோயில், அதன் உரிமையுள்ள பங்காளிகளால் பிளவுபட்ட தோஷம் எனவும், அதற்கு ஊர் பகையும் துணை போயிருக்கிறது எனவும் உணரலாம்.
3.விக்கிரத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டில் மிக முக்கியமானது அஷ்டபந்தன திரவியம் ஆகும்.
அவை பாதிக்கப்பட்டிருப்பதை நான்காம் பாவகம் கொண்டும்,நான்காம் பாவகம் சரமானால் அஷ்டபந்தனம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே இளகிவிட்டது அல்லது கெட்டுவிட்டது எனவும்,
ஸ்திரமானால் மிக இறுக்கமாக இறுகி கெட்டுவிட்டது எனவும்,
உபயமானால் சரியாக நல்ல நிலையில் இருக்கிறது எனவும் ஆய்வறிந்து சொல்ல வேண்டும்.
*என்றும் அன்புடன்*
*ரிஷி*

Comments
Post a Comment