தீர்ப்பு சாதகமா? பாதகமா?நியாய தராசு

 தீர்ப்பு வாடிக்கையாளருக்கு சாதகமாக வருமா?என்பது கேள்வி

வாடிக்கையாளரின் கேள்வி 

(மதுரை பிரபாகரன்)


ஜாதகருக்கும் அவருடைய அத்தைக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமாக பல வருடமாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வழக்கு வரக்கூடிய மார்ச் 18-ஆம் தேதி 2025 அன்று தீர்ப்பு வருகிறது. 

தீர்ப்பு இவருக்கு சாதகமாக வருமா?என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கான பிரசன்னம் 


குழுவில் இக்கேள்விக்கு பதில் அளிக்க கேட்கப்பட்டது.

[14/03, 7:38 pm] +91 98434 54400: *Jamam Madurai Prabhakaran*👆👇

ஆருடம் சரியாக உதயத்திற்கு ஏழு நிற்கிறது 

உதயாதிபதி உதயத்தை நோக்கி வருகிறார் 


ஆனால் கவிப்பு எட்டில் இருப்பது எதை குறித்து சொல்கிறது என்பது குழப்பமாக வருகிறது எனக்கு

                        ---------------_------------

[14/03, 8:50 pm] +91 98401 46286: ஜாதகருக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு குறைவு.

                             -----------------

*Jamam c.s.sanmugam*

வணக்கம் Sir 🙏 

வாழ்க வளமுடன்.

இந்த பிரசன்னம் Gemini School of Astrology Jamakkol Prasannam Android app இல் போட்டு பார்க்கப்பட்டது.

இந்த பிரசன்னம் வழக்கு என்பதால் இரு நபர் சார்ந்த

பிரசன்னமாகும்.

இரு நபர் சார்ந்த பிரசன்னத்தில்

உதயத்திற்கு 

5 மற்றும் 9 ஆம் இடங்கள் வலுப்பெற்றால் உதயம் தோல்வி அடையும் என்று நாம் Gemini School of Astrology Jamakkol Prasannam பாடத்தில் படித்து இருக்கிறோம்.

என்ன அப்படியா?


ஆம்.அது தான் விதி [Rule].

 மிக எளிமையான இந்த விதிபடி இந்த பிரசன்னத்தில் உதயத்திற்க்கு 5,9 ஆம் இடங்கள்

மற்றும் அதன் அதிபதிகள் இங்கு இந்த இடத்தில் வலுவாக உள்ளன.

ஆகவே,வழக்கில் எதிர் நபர் வெற்றி பெறுவார் என்று பிரசன்னம் சொல்கிறது.✍️

அடுத்து கவிப்பு பாம்பை கவிழ்த்து உள்ளதால் இந்த வழக்கில் கேள்வியாளர் தனது தரப்பு நியாயத்தை சட்டப்படி நிருபிக்க முடியாது.[ His right to claim in the ancestral property is legally not substantiated.

Therefore failed in the case ]

அடுத்து உதயத்தற்க்கு கேள்வி

யாளருக்கு 3 ஆம் இட அதிபதி மற்றும் வழக்கு காரக பாவாதிபதி 6 ஆம் இட அதிபதி மற்றும் வழக்கு காரகன் என வரும் புதன் உதயத்திற்க்கு 

12 இல் நீச்சம். இது கேள்வி யாளருக்கு தோல்வியை

குறிக்கிறது. 

எதிர் நபருக்கு வழக்கை குறிக்கும் 6 ஆம் இடத்தில் [உதயத்திற்க்கு 

12 ஆம் இடம்] காரகன் புதன் நீச்சம்.

ஆனால், எதிர் நபருக்கு 

6 இட அதிபதி குரு எதிர் நபருக்கு 

8 இல் வலுவாக உள்ளது. பிரசன்னத்தில் எதிர் நபருக்கு 

8 ஆம் இடம் [ உதயத்திற்கு 

2 ஆம் இடம் ] வலுவானால்  எதிர் நபர் தோல்வி அடைவார்.

இப்படி பிரசன்னம் வந்தால் என்ன செய்வது?

கவிப்பு பாம்பை கவிழ்த்து உள்ளதால் சம்பவம் மாறி நடக்கும்.

இது கேள்வி யாளருக்கு பிரசன்னம் தரும் பதில். கேள்வி யாளருக்கு சம்பவம் மாறி நடக்கும் என்றால் என்ன பொருள் எதிர் நபர் வழக்கில் வெற்றி பெறுவார் என்று பொருள் அல்லவா.

அடுத்து ஆருடம் 

7 இல் நின்று வழக்கில் தீர்ப்பு எதிர் நபருக்கே சாதகமாக வரும் என்கிறது.

ஆகவே,வழக்கின் தீர்ப்பை எதிர் நோக்கி இந்த பிரசன்னத்தை வரும் 

18.03.2025 க்கு தள்ளி வைக்கலாம்.✍️

                           -----------------------

மதுரை பிரபாகரன்

மீண்டும் அதே நபர் என்னிடம் கேள்வி கேட்டுள்ளார் வரும் 18ஆம் தேதி தீர்ப்பு வந்துவிடுமா அல்லது தேதி தள்ளி வைக்கப்படுமா என்று. இதுவரை 2008 இல் இருந்து இந்த வழக்கு நடக்கிறதாம் பத்து பதினைந்து முறை தள்ளிப் போய்விட்டதாம்.

                         ---------------------

*SS பதில்* 

ஜாதகருக்கு சிறிது நட்டம் மனகஷ்டம் ஏற்படும்.

ஆனாலும் *ஜாதகருக்கே சாதகமான நிலை தீர்ப்பு கிடைக்கும்.*👍

                         --------------------------

மதுரை பிரபாகரன்

இது எந்த லாஜிக்கின் அடிப்படையில் சார் புரிந்துகொள்ள முடிகிறது 

என்னுடைய புரிதலுக்காக கேட்கிறேன் சார். கொஞ்சம் விளக்கம் தாருங்கள்🙏

                        ---------------------------

[15/03, 1:50 am] S.Shanmuganandam🤴: *விளக்கம்* 

உதயம் மேஷம் *(ஜாதகர்)* 

ஆருடம் (துலாம்) 7ல் *எதிர் நபர்* 

 *நிலவரம்* 

உதயத்தைக் கடந்த கோள் *புதன் (நீச்சம்)* 

உதயத்தை நோக்கி வரும் கோள் *குரு* 

(தாமதமாக வந்தாலும் தடைகளைத் தகர்த்து சுப பலனே தரும் நிலை)

 

ஆருடத்தைக் கடந்த கோள் *பாம்பு* 

(எதிர் தரப்பினருக்கு இருந்த நெருக்கடி இக்கட்டான நிலை விலகிவிட்டது).


உதயத்தில் கவிப்பு இல்லை.


உதயாதிபதியும் (செவ்வாய் 3ல்)

கவிப்பு இல்லை.

ஆருடத்தில் கவிப்பு இல்லை.

ஆருடாதிபதியும் (சுக்கிரன்6ல்) கவிப்பு இல்லை.

 *உண்மைநிலை* 

உதயத்திற்கு 6ல் பாம்பு ஜாதகருக்கு மிகுந்த நெருக்கடி 

8ல் கவிப்பு வழக்கால் மிகுந்த துன்பம் துயரம் வேதனை 

வழக்கு ஏற்படுத்திய 6ஆமிட அதிபதி புதன் 12 ல் மறைந்து நீசமாகி போனார்.

அதனால் வழக்கு வலுவிழந்து போகும் என்பது கண்கூடு.

[15/03, 1:51 am] S.Shanmuganandam🤴: *எதிராளி நிலை* 

வழக்காடிய ஆருடாதிபதி சுக்கிரன் 6ல்.

இருவரும் சம அளவு வலுவில் இருந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.


 *முடிவு என்ன?*


இதுபோன்ற நிலையில் உதயத்தை நோக்கி வரும் கோள் குரு.அவர் தாமதமாக வந்தாலும் சுப பலனே தருவார்..அவர் ஸ்திர ராசியில்.தரும் பலன் நிலையானது; உறுதியானது.

 *ஆருடத்தை நோக்கி வரும் கோள் நீச சந்திரன்* .அவர் ஸ்திர ராசியில்.தரும் பலன் நிலையானது; உறுதியானது.

இவ்விரண்டையும் ஒப்பிடும்போது நீச சந்திரன் வருகையால் எதிராளி வலுவிழந்து போகும் நிலை ஏற்படும்.

அதேபோல உதயத்தை நோக்கி குருவின் வருகையால் ஜாதகருக்கு சுபமான சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்பதே உண்மை நிலவரம்.

நன்றி! வணக்கம்!

 *திரு S.ஷண்முகானந்தம்* *M.A.B.Ed.,RTD Hm* *பொள்ளாச்சி*

                           -----------------------------


மதுரை பிரபாகரன்

[18/03, 10:55 am] +91 98434 54400: வெளிநாட்டில் வேலை செய்து கொண்டே பிரசன்னத்தைக் கற்றுக் கொண்டு கொண்டிருக்கிறேன்.

இது என்னுடைய சொந்தக்காரர் ஒருவர் நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும்போதே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். 

அதனால் தான்.


[18/03, 1:54 pm] +91 98401 46286: 

உதயாதிபதி உச்சம் அதனால்  தீர்ப்பு இன்று வரும். கவிப்பு 3ல் இருப்பது மற்றும் உதயத்தை நோக்கி வரும் சுக்கிரனை கவிப்பது சாதகமற்ற சூழ்நிலை என்பது எனது புரிதல்.

C.s.sanmugam

[19/03, 11:51 pm] +91 75983 08966: வணக்கம் 🙏

தீர்ப்பு வந்ததா?

அதன் விபரம் அளிக்க முடியுமா?

                          ---------------------

மதுரை பிரபாகரன்

[22/03, 6:23 pm] +91 98434 54400: அன்றைய தினம் தீர்ப்பு வரவில்லை 

 *தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது* .

வரும் 25 தேதி செவ்வாய்க்கிழமை அன்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

                          -----------------------

மதுரை பிரபாகரன்


மீண்டும் தற்போது அவர் என்னிடம் கேட்ட கேள்வி... வரும் 25ஆம் தேதி தீர்ப்பு வருமா?

C.s.sanmugam

வணக்கம் Sir 🙏 

இந்த பிரசன்னம்

ஜெமினி ஸ்கூல் ஆஃப் அஸ்டராலேஜி Android Software இல் பார்க்கும் போது உதயத்தை நோக்கி சனி வருகிறது மற்றும் 

கவிப்பு 7 ஆம் பாவத்தை கவிழ்த்து உள்ளது.

கவிப்பு வழக்கு காரகன் செவ்வாயை கவிழ்த்து உள்ளது.

சூரியன் நீச்சம்.

ஆகவே, அன்றும் வாய்ப்பில்லை என்றே கேள்விக்கு பிரசன்னம் பதில் தருகிறது.✍️

                              -----------------------

*28/03/2025 வெள்ளிக்கிழமை அன்று பதில் கூறினார்.*



தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது. ஜாமக்கோள பிரசன்னத்துடன்..., அவருடைய பிறந்த ஜாதகத்தை  நாடி முறைப்படி பார்த்து விட்டு கண்டிப்பாக தீர்ப்பு சாதகமாக வரும் என்றேன். அவருக்கு மகிழ்ச்சி.

இந்த செய்தியை 28/03/2025 வெள்ளிக்கிழமை இரவு 8.07 மணிக்கு வந்துள்ளது.

அதனை இரவு 9.00மணிக்கு குழுவில் பதிவு செய்துள்ளார் மதுரை பிரபாகரன் 

இறுதியில் 

உதயத்தை நோக்கி குருவின் வருகையால் ஜாதகருக்கு சுபமான சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது என்பதே .👍 வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


என்னே கிரகங்களின் மாயாஜாலம்!

ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!!💫

நமது வாழ்வின் வழிகாட்டி ஜாமக்கோள் பிரசன்னம்! என்பதை மீண்டும் தெளிவாக உணர்த்திவிட்டது.

வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!



 

Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்