எதுவும் நடக்கும்! தடையைத் தகர்க்கும்! எது?

 எதுவும் நடக்கும்! தடையைத் தகர்க்கும்! எது?




*கேள்வி**

உயர் அதிகாரி பள்ளி ஆய்வுக்கு வருவாரா?*

*இந்த பிரசன்னத்திற்கு உங்கள் பதில் என்ன*?
என குழுவில் கேட்கப்பட்டது.

சுக்கிரன் முனியாண்டி காந்தி 






சுக்கிரன் சுப்ரமணியம் Bombay 

வணக்கம்🙏?உடல்நலக்குறைவால் அதிகாரி வரமாட்டார்.
--------------------
Sukran Ravindran

உதய ஆருட அதிபதி சுக்கிரன் மூன்றாம் பாவத்தில் அமர்ந்து உள்ளார்.

 பெண் மேல் அதிகாரியான அவருக்கு இடமாற்றம் ஏற்படும் சூழ்நிலையில் உள்ளார்.

 பதவியைக் குறிக்கும் பத்தாம் பாவ அதிபதி சனி கவிப்பில் இருப்பதால் தற்சமயம் இந்த காரியம் நடக்காது

                       ------------------------++---

Sukran Lakshmi new

வணக்கம் ஐயா 🙏

உதயம் ஆருடம் இரண்டும் கால புருஷனுக்கு இரண்டாம் வீட்டில் அதாவது ஒரே வீட்டில் ஆக இந்த காரியம் செய்ய வேண்டும் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது, 

அதேபோல் உதயத்திற்கு இரண்டாம் இடத்தில் கவிப்பு இருந்து ஒன்றாம் வீட்டில் சனியை கவிழ்த்து இருக்கிறது,

உதயம் ஆருடம் அதிபதி சுக்கிரன் மூன்றாம் இடத்தில் அதாவது பயணம். 

சனி கவித்திருப்பதாலும் உதயம் ஆருடம் ஒரே வீட்டில் இருப்பதாலும் நிச்சயமாக அதிகாரி வருவார் ஆனால் தாமதமாக வருவார்.🙏

--                       ----------------------

Sukran Srividya Astro 

[20/02, 11:52 am] Sukran Sri Vidhya Astro: குருவே துணை. உதயத்தில் சனி. எதிர்பார்த்த வரவு2 ல் கவிப்பு. உதயாதிபதி 3 ல். 

தேதி மாற்றப்பட்டு இன்னொரு நாள் ஒத்தி வைக்கப்படும்🙏

[20/02, 12:13 pm] Sukran Sri Vidhya Astro: குரு வாழ்க. உதயத்தில் 10 ம் அதிபதி சனி.கவிப்பு 2 ல்.எதிர்பார்த்த வரவு. உயர் அதிகாரி வருவாரா என்பது கேள்வி . 

உதயாதிபதி 3 ல் 

சந்திரன் மனையில். ஆக மாற்றம் உண்டு. காரகர் சூரியன் 8 மிடத்தை நோக்கியும். 10 ம் அதிபதி அடுத்து நீச நிலைக்கும் செல்ல இருப்பதால்

அதிகாரி வரும் தேதி மாற்றப்பட்டு விடும்.

                              -------------------

SS பதில் 

அனைவருக்கும் வணக்கம்.

காலையில் போடப்பட்ட பிரசன்னத்திற்கு நீங்கள் பதில்கள் அளித்திருந்தீர்கள்..

நல்லது.

 *ஆனால் அந்த உயர் அதிகாரி ஒரே நாளில் இரண்டு முறை பள்ளிக்கு வந்து சென்றுவிட்டார்.*

எப்படி இது நிகழ்ந்தது?

இப்போது என்ன சொல்கிறீர்கள்?

 *உங்கள் பதில்....?.....!!!!!*

                       +++++++++++++++++

சுக்கிரன் முனியாண்டி காந்தி

அனைவருக்கும் வணக்கம். உதயம் /ஆருடம் ரிசபம் ஸ்திரமனை  உதயம் ஆருடம் ஒரேராசியில் இருந்தால் காரியம் வெற்றி.

கவிப்பு மிதுனத்தில். மிதுனம் உபய லக்னம். இரன்டு சம்பவங்கள் சுட்டிகாட்டும்.. உதயாதிபதி சுக்ரன் 3ல் பயனம்.

 உதயத்தில் 9*10அதிபதி சனிபகவான் 

கவிப்பில் சனிபகவான் 

கவிப்பு அதிபதி புதன்  நான்காம் பாவகத்தில் காரகர் கல்வி காரகத்துவம்   உபயத்தில் கவிப்பு இரன்டுசம்பவங்கள் நடக்கும்.

உங்கள் பதில் 

கா. முனியாண்டி

சிவகாசி🙏🙏🙏🙏






கேள்வி**

உயர் அதிகாரி பள்ளி ஆய்வுக்கு வருவாரா?*

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

 *நேற்றைய தினம் ஆய்வுக்காக கொடுக்கப்பட்ட பிரசன்னத்திற்கான பதில்* 

பொதுவாக ஜாமக்கோள் பிரசன்னத்தில் உதயத்தில் ஆருடம் அமையும் போது கேள்வியானது தனக்குரியது ஆகும்.

கேள்வியாளரின் கேள்வி நடக்கும் எனும் போது உதயம் ஆருடம் இவற்றில் ஜாம கிரகங்களான குரு சுக்கிரன் சந்திரன் (சுப கிரகங்கள்) இருக்க வேண்டும் என்பது ஜாமக்கோள் பிரசன்னத்தின் விதி.

அதேபோல 

கேள்வியாளரின் கேள்வி நடக்காது எனும் போது தடை தாமதத்தைத் தருகின்ற ஜாம கிரகம் சனி அமைந்துவிடும்.

அதேபோல உதயம், ஆருடம்,  உதயாதிபதி, ஆருடாதிபதி மற்றும் கேள்வியின் பாவம், அந்த  பாவ அதிபதி இவற்றில் கவிப்பு அமைந்துவிடும்.

இதுதான் ஜாமக்கோளின் விதி.

இங்கே ஆய்வுக்கு  கொடுக்கப்பட்ட பிரசன்னத்தில் உதயம் ஆருடம் ஆகியவை ரிஷபத்தில் அமைந்துள்ளன.

அது ஸ்திரமனை. உறுதியாக செயல் நடத்தும் இடம்.

 அங்கேயே நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் சனி பகவான் அமர்வு.

 *அப்படியென்றால் கேட்ட கேள்வி நடக்க விடாமல் சனி தடுத்துக் கொண்டு நிற்கிறது*

இங்கே தான் ஜாமக்கோள் தனது ஜாலத்தைக் காட்டுகிறது.

எப்படி?

 *பிரசன்னத்தில் முக்கிய காரண கர்த்தாவாக விளங்கும் செகண்ட் நாயகன் எதிராக செயல்படுத்தும் தலைமையகம் கவிப்பு*

 *செக் வைக்கும் அமைப்பு கவிப்பு*.

 *பாதிப்பு, சேதாரம், நஷ்டம், தடையை உடனேயே தரும் அதிகாரம் கொண்ட நாயகன் கவிப்பு.* 

கவிப்பு எந்த வீட்டில் இருக்கிறதோ அதற்கு ஏற்ப தனது தன்மையை செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்.

செயல்படுத்துவார்.

இதெல்லாம் சரி.

பிரசன்னத்தின் விதியின்படி உதயம் ஆருடம் இருந்த இடத்திலேயே நிகழ்வை தடுக்கும் சனி அல்லவோ இருக்கிறது.

கேட்ட கேள்வி நடக்காது எனும் போது அப்படி விதியிருக்க ...

உயர் அதிகாரி பள்ளி ஆய்வுக்கு ஒரு முறைக்கு இரண்டு முறை அல்லவா வந்து சென்றுள்ளார்.

இது எப்படி நடந்தது?

இங்கே தான் பிரசன்னத்தின் ஜாலம் தன் கைவரிசையைக் காட்டுகிறது.

அதாவது விதிக்கு விதி செய்வோம் என்று MLA போட்ட உத்தரவு முதலமைச்சர் அதிகாரத்தின் முன் எடுபடுமா? என்பதுபோல 

முழு அதிகாரம் கொண்ட பிரதமரின் செயல்பாட்டால் 

MLA வின் உத்தரவு ரத்தானது.

 *சனியின் தடையைக் கவிப்பு தகர்த்து விட்டது.*

 *அரிவாளுக்கு அறிவாள்* 

கவிப்பின் நிலைப்பாட்டால் 

2ஆம் பாவத்திலிருந்து( *வருகை* )உபயத்திலிருந்து செயல்பாட்டினால் 

 *Double okay ஆகிவிட்டது*

 *அந்த செயல் ஒன்றுக்கு இரண்டு முறை நடைபெற்று விட்டது.*

அதனால் உயர் அதிகாரி* 

*பள்ளிக்கு இரண்டு முறை வந்து சென்றுள்ளார்.*

                         ++++++++++++++

*சனியின் தடை எப்படி விலகியது?* 

பிரதான சாலையில் அமைச்சரின் கார் வந்தால் போக்குவரத்து நடவடிக்கைகள் துரிதமாக செயல்பட்டு எல்லா சிக்கல்களும் பச்சை கொடி காட்டிவிடும்.

அவரது பயணத்திற்கு எவ்வித பாதிப்பும் தடையும் இல்லாமல் பாதையில் அவரது கார் பயணிக்க தங்குதடையின்றி செல்ல வழி விடுவது போல.....

 *சனியின் தடையைக் கவிப்பின் வருகையால் அனைத்தும் clear ஆக்கி விட்டது.*

இப்போது புரிகிறதா?

 *கிரகங்களின் மாயாஜாலம்!*

*ஜாமக்கோளின் வண்ணக் கோலம்!*

எதுவும் நடக்கும்! தடையைத் தகர்க்கும்! எது என்பது? என்று......




 *இதேபோல நாளை உங்களுக்கு வேறொரு ஜாலத்தின் கோலத்தைக் காட்டுகிறேன்.* 

காண தயாராக இருங்கள்!

 *படியுங்கள்! ரசியுங்கள்!* 

அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறும் 

 *உங்கள் அன்புள்ள* 

 *ஸ்ரீமால் சிந்தைக்கூரியன்* 

 *திரு S.ஷண்முகானந்தம் 

RTD Hm*.

*ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிடம் மையம் பொள்ளாச்சி* 

99657 28932

94437 28932

 *Camp: Henrico Richmond Virginia USA*



Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்