நூதனமான ஜாமக்கோள் பிரசன்னம் மரணப் பிரசன்னம்
இன்று ஒரு *நூதனமான ஜாமக்கோள் பிரசன்னம் ஒன்றைப் பார்ப்போம்*
*வாடிக்கையாளரின் கேள்வி*
Mother in law in critical condition , will she survive?
*மாமியார் ஆபத்தான நிலையில் இருக்கிறார், அவர் பிழைப்பாளா?.*
*அதற்கான பிரசன்னம்*
இதுபோன்ற உடல் நலம் குன்றிய நிலையில் கேள்வி கேட்கப்படும் நிலையில்.....
*பிரசன்னத்தில் நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்*
உதயம் உதயாதிபதி
ஆருடம் ஆருடாதிபதி
4ஆமிடம் அதன் அதிபதி இவர்கள் கவிப்பில் உள்ளார்களா?
அதுமட்டுமின்றி பாதகாதிபதி மற்றும் எமகண்டம்,மிருத்யு ஆகியோர் நிலை.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஆயுள் ஸ்தானம் மற்றும் ஆயுள் காரகன் சனி கவிப்பில் உள்ளாரா? என்று கவனிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பிரசன்னம் இருப்பின் ஜாதகர் உடல் நலம் பெற்று வாழ்வார்கள்.
அப்படியில்லையெனில் சிகிச்சை பலனின்றி அவர் உடல் நலம் குன்றி உயிர் பிரிந்து விடும்.
*அதற்கான பிரசன்னம்*
மேற்கண்ட பிரசன்னத்தில்
முதல் விதியின்படி ஆருடாதிபதி கவிப்பில் உள்ளார்.
8ஆமிடம் அதிபதி புதன் 8ல் ஆட்சி (மிதுனம்). மிருத்யுவை கடந்து சென்று விட்டார்.
அதனால் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.
ஆனால் ஆயுள் காரகன் சனியைக் கவிப்பு கவித்துள்ளது. எமகண்டம் நோக்கி பயணம்.
அத்தோடு உதயத்தை நோக்கி பாம்பு வருகை இருப்பது ஆபத்தான நிலை தான்.
*ஆக எல்லாவற்றையும் பார்க்கும்போது ஜாதகர் உயிர் பிழைப்பது சற்று கடினம்தான் என்று பிரசன்னம் காட்டுகிறது.*
*பிரசன்னம் சொல்வது என்ன?*
*உதயம் விருச்சிகம்*
*ஆருடம் 3ல் மகரம்*
*கவிப்பு 6ல் மேஷம்*
*உதயாதிபதி செவ்வாய் 11ல் கன்னிமனையில்*
*ஆருடாதிபதி சனி 5ல் மீனத்தில் கவிப்பில்*
*ஆருடாதிபதி சனி 5ல் மீனத்தில் கவிப்பில் இருப்பதால் .....
ஆயுள் காரகன் சனி பகவானும் கவிப்பில் இருப்பதால் .....
ஜாதகி உயிர் பிழைப்பது கடினம்*
*எப்போது இந்த நிகழ்வு ஏற்படும்?*
*பிரசன்னத்தில் சனி மீனத்தில் 6.45 பாகையிலும்
கும்பத்தில் எமகண்டம் 28.39 பாகையிலும் உள்ளனர்.
சனி எமகண்டத்தைத் தொட
பாகை 30.00- 28.39=1.21
சனி. =6.45
இடைவெளி =8.06
ஆக 8வது நாளில் சனி எமகண்டத்தைத் தொடும்.
அந்த நேரத்தில் கவிப்பில் உள்ள சனி எமகண்டத்தைத் தொடுவதால் ஜாதகியின் உயிர் பிரிய நேரிடும் என்பதை பிரசன்னம் தெரிவிக்கிறது.
அதாவது பிரசன்னம் போட்ட 8வது நாளில் ஜாதகியின் உயிர் பிரியும்.
*நடந்தது என்ன?*
*பிரசன்னம் போட்ட நாளிலிருந்து 8 வது நாளில் ஜாதகி காலமானார்.*
*என்னவென்று சொல்வது? பிரசன்னத்தின் தீர்க்க தரிசனம்!*
*நமது வாழ்வின் வழிகாட்டி ஜாமக்கோள் பிரசன்னம்!*
*கோள்களின் ஜாலங்கள்! வாழ்வின் வண்ண கோலங்கள்!*
மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்!
நன்றி வணக்கம் 🙏
திரு ஷண்முகானந்தம்
ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிடம் மையம்
பொள்ளாச்சி 99657 28932








Comments
Post a Comment