ஜாமக்கோள் பிரசன்னத்தில்* கேள்வி எவ்வாறு எழுகிறது?

 *ஜாமக்கோள் பிரசன்னத்தில்* கேள்வி எவ்வாறு எழுகிறது? என்பதைப் பற்றி இன்று பார்ப்போம்.


 உதயத்திலிருந்து ஆருடம் எந்த பாவத்தில் உள்ளதோ அது சம்பந்தப்பட்ட வினா கேள்வியாளர்களிடமிருந்து கேட்கப்படும்.


 *உதயம் லக்னம்*

 கேள்வி எழுந்த நிலை.

 *ஆருடம்*

 கேள்வியாகும்.


 *கவிப்பு*

 கேள்விக்கு / கேள்வியாளருக்கு நிகழ்ந்த *நிகழ்வின் பாதிப்பு* சேதாரம், நஷ்டம், மோசமான நிலை, பிரசன்னத்தின் ரகசியம் ஆகியவற்றை உள்ளடக்கியது.


 *உதயத்தில் ஆருடம்* ஜாதகர் தன்னைப் பற்றிய வினா கேட்பார். ஜாதகரின் 

தோற்றம், கௌரவம், வாழ்க்கை திறன், குணநலன்கள், ஆயுள் பற்றிய கேள்வி 

 *உதயத்திற்கு 2ல் ஆருடம்* 

இரண்டாம் பாவம் சம்பந்தப்பட்ட வினா

குடும்பம், சம்பாத்தியம் பணவரவு ,புதிய நபர் வருகை பற்றிய கேள்வி 


 *உதயத்திற்கு 3ல் ஆருடம்*

தனது முயற்சி, இளைய சகோதரம், சிறுதூரப் பயணம், அண்டை அயலாரின் உறவு நிலை, தகவல் தொடர்பு பற்றியவை.


 *உதயத்திற்கு 4ல் ஆருடம்* 

தாயார், தேக நலன், வீடு, வண்டி, வாகனம், உயர்நிலைப் படிப்பு, சொத்து விவரம் பற்றியவை.


 *உதயத்திற்கு 5ல் ஆருடம்* 

குழந்தைகள், குலதெய்வம், ஆழ்மன சிந்தனை, காதல் திருமணம், கலைகளில் நாட்டம், மனமகிழ்ச்சி, பங்கு சந்தை வணிகம் பற்றிய வினா.


 *உதயத்திற்கு 6ல் ஆருடம்*

நோய், கடன், எதிரி, திருட்டு, வேலைவாய்ப்பு, வேலையாட்கள், குழந்தைகளின் வருமானம்


 *உதயத்திற்கு 7ல் ஆருடம்*

வாழ்க்கைத் துணை, நண்பர்கள், வியாபாரத்தில் கூட்டாளி, திருமண தகவல் தொடர்பு நிலையங்கள், வெளிவட்டார புழக்கங்கள், சமுதாயம் சார்ந்தவை

 *உதயத்திற்கு 8ல் ஆருடம்*

தனக்கு ஏற்பட்ட துன்பம் துயரம், அவமானம், அபகீர்த்தி, பழிச்சொல், காணாமல் போதல், பெரும் நோய் வந்து அவதியுறல், நீதிமன்ற வழக்கு, ஆயுள் பயம் மற்றும் ஆயுள் இன்சூரன்ஸ், திடீர் அதிர்ஷ்டம், எதிர் பாராத பணவரவு, 

மனைவியின் வருமானம், மனைவி வகையில் சீர் வரிசை,தூர தேச பயணம் 


 *உதயத்திற்கு 9ல் ஆருடம்* 

தந்தையார், நீண்ட தூர பயணம், பள்ளி, கல்லூரி, பட்டப்படிப்பு, வங்கி, கருவூலம், ஆன்மீக சிந்தனை, தீர்த்த யாத்திரை, வெளிநாட்டில் சென்று பணிபுரிய, 2 வது திருமணம் 


 *உதயத்திற்கு 10ல் ஆருடம்* 

சுய தொழில், பதவி, பட்டம், பதவி உயர்வு, அந்தஸ்து, கௌரவம் மேலோங்குதல், மாமியார், இறுதிச்சடங்கு ஈமச்சடங்கு செய்தல்


 *உதயத்திற்கு 11ல் ஆருடம்*

நட்பு வட்டம், நண்பர்கள், மூத்த சகோதரம், லாபம், ஆதாயம், பட்ட மேற்படிப்பு, பிஎச்டி, இளைய மனைவி, தன் ஆசை நிறைவேறுதல் 


 *உதயத்திற்கு 12ல் ஆருடம்*

தனக்கு ஏற்பட்ட வீண் செலவு, விரயம், மனைவிக்கு ஏற்படும் மருத்துவச் செலவு, மருத்துவ சிகிச்சை, உணவு உண்ணுதல், கலவி உறவில் ஈடுபடுவது, வெளியூர் பயணம், புதிய முதலீடு, பரதேச வாசம்


இவைகளைக் கொண்டு கேள்வியாளர்களின் கேள்வி என்னவென்று நாம் தெரிந்து கொள்ளலாம்.


 இதே போல *கவிப்பு* எந்த பாவத்தைக் கவித்து இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். அதனால் நஷ்டம், பாதிப்பு,சேதாரம் ஏற்பட்டதைக் காட்டும்.

Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்