பிரசன்னம் வெற்றி பெறுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது?
ஒரு பிரசன்னம் வெற்றி பெறுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது?✌
பொதுவாக ஒரு பிரசன்னத்திற்கு பதில் கூறும்போது பிரசன்னம் வெற்றிபெறும் என்பதை எப்படி நாம் தீர்மானிக்கிறோம் அது நமக்கு சாதகமான பதிலைத்தான் தருகிறதா அல்லது பாதகமான பதிலை தர இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளக்கூடிய கோல்டன் ரூலை எங்கே நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது என்பது முக்கியமாகும்.
அதாவது உதயத்தில் ஆருடத்தில்
உதயாதிபதியோ ஆருடாதிபதியோ
கேட்கப்பட்ட கேள்வியின் பாவம் மற்றும் அந்த பாவத்தின் அதிபதி கவிப்பில் இல்லாமல் இருந்தால் அந்தக் கேள்விக்கு பிரசன்னம் நமக்கு சாதகமான பதிலைத் தரும் என்பது உறுதி என்பது தெளிவாகிறது.
அதேபோல ஒரு கேள்வி நேரடியாக கேட்கப்படும் போது கவிப்பை நாம் பெரிதாக பார்க்க வேண்டியதில்லை.
அதனிடம் உள்ள ரகசியம் மட்டும் என்னவென்று தெரிந்து கொண்டால் போதும் அதைக் கொண்டு நாம் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.
அதே சமயம் பதில் என்ன எதிர்காலத்தில் நடக்க இருக்கிறது என்பதை முதலில்உதயத்தை நோக்கி வரக்கூடிய கோளை வைத்து அது சுபகோளாக இருந்தால் அதாவது குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் ஆக இருப்பின் முடிவு சுகமாக நல்ல விதமாக அமையும் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடிகிறது.
அசுப கிரகங்களான சனி, செவ்வாய், பாம்பு போன்ற ஜாம கிரகங்கள் உதயத்தை நோக்கி வரும்போது அடுத்து வரக்கூடிய காலங்களில் அசுப பலன்கள் தான் நடக்கும் என்பது தெளிவாக தெரிந்து கொள்ளலாம் .
இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். வழக்கு பிரசன்னம்
இந்த உதாரண பிரசன்னத்தில் பிரசன்னம் காட்டப்பட்ட நிலையை அப்படியே சி த பிக்சரைக் கொண்டு பார்க்கும் போது ஒன்பதாம் அதிபதி ஆன குரு (பாக்கியாதிபதி) உதயத்தை நோக்கி வருவதும் வரக்கூடிய எதிர்கால கட்டத்தில் இந்த கேள்வி சுப(சுக)மாக நிகழ்வாக முடியும் என்பதை காட்டுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதே சமயம் வழக்கில் தீர்ப்பு சொல்லக் கூடிய நிலை என்று பார்க்கும்போது எட்டாம் அதிபதியாகிய சனி பகவான் நீச நிலையை அடைந்திருப்பதால் வழக்கு ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதை அறிவிக்கிறது.
எட்டாம் பாவம் துன்பம், துயரம்,வழக்கு, அவமானம் என்பதையும் அந்த அதிபதி நீசம் அடைந்த நிலையில் அந்த பாவம் பாவ அதிபதி கெட்டுவிட்டது. நீசம் அடைந்து விட்டது .அதனால் வழக்கு தோல்வி அடையும் என்பதை தெரிவிக்கிறது.
வழக்கு தோல்வி அடைந்தது.
கவிப்பில் சிக்கிய புதன் அவரது காரகங்கள் தான் இங்கே பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அதாவது புதனின் காரகங்களான ஆவணங்கள், ஆதாரங்கள் சரியாக இல்லாதது என்பது ஒரு பக்கம். எதிரியிடம் அத்தகைய சரியான ஆவணங்கள் இல்லை என்பதும் மட்டுமே விசாரணையில் முக்கிய பங்கு ஆற்றி உள்ளது என்பது தெரிகிறது.
அதுவே கேள்வியாளருக்கு வெற்றி வாய்ப்பை தந்திருக்கிறது என்பது உறுதியாக தெரிந்து விட்டது.
கவிப்பில் புதன் சிக்கியது என்பது அதன் காரகங்கள் மட்டுமே பாதித்துள்ளன என்பது இந்த பிரசன்னம் வெளிப்படுத்தியது அதனுடைய பாவங்கள் அல்ல என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது.
3, 12 க்கு அதிபதியான புதன் அந்த அதிபதி உடைய காரகங்கள் மட்டுமே இங்கு ஒரு பக்கம் பலவீனமாகவும் மறுபக்கம் கேள்வியாளருக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது என்பது தெரிகிறது.
கேள்வியாளர்களின் முயற்சி என்று சொல்லக்கூடிய மூன்றாம் பாவம் அதேபோல் அவரது 12 பாவமும் இங்கே பாதிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
அதனால் கேள்வியாளர்களின் முயற்சி கெடவில்லை என்பது மட்டும் அல்லாமல் சரியான ஆதாரங்களை அவர் காட்டியதால் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியால் விசாரணை வெற்றிகரமாக அமைந்து வழக்கு ஒன்றும் இல்லாமல் போனது என்பது தெளிவாக தெரிந்து விட்டது.
எதிரியிடம் சரியான ஆவணங்கள் ஆதாரங்கள் விசாரணையில் சமர்ப்பிக்கப்படாததால் வழக்கு தோற்றுப் போனது என்பதை நிதர்சனமாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
லக்ன சந்தி இங்கு வேலை செய்யவில்லை.
லக்ன சந்தி 30 பாகையில் அமைந்தும் அது கடகத்தையே முதன்மையாகக் கொண்டு உதயம் கடகமாக இருந்து செயலாற்றி உள்ளது.
மேலும் உதயாதிபதி சந்திரன் 9ஆமிடமாகிய பாக்கியஸ்தானத்தில் சென்றதும் பாக்கியாதிபதி உதயத்தை நோக்கி வருவதும் வழக்கு கேள்வியாளருக்கு சாதகமாக அமைந்தது. வழக்கு வெற்றி பெற இருப்பதையும் காட்டிவிட்டது.
இவ்வாறு ஒரு பிரசன்னம் வெற்றி பெறுமா? என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி வணக்கம்
.jpg)

ஜாமக்கோள் பற்றிய அருமையான விளக்கம் சார். சிறிது காலமே எனக்கு ஜாமக்கோள் அறிமுகம். இதுவரை ஜாமக்கோள் தோற்றதில்லை. Very powerful Tool to predict the raised questions. தொடர்ந்து எழுதுங்கள் திரு.சண்முகானந்தம் சார். வாழ்க வளமுடன்!!
ReplyDelete