நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசுவாயா? ஜாமக்கோள் பேசியது என்ன?

 நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசுவாயா? ஜாமக்கோள் பேசியது என்ன?


 நேற்றைய தினம் ஜாமக்கோள் பிரசன்னம் ஒன்றில் வந்தவரின் நோக்கம் என்னவாக இருக்கும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

ஜாதகம் பார்க்க வந்தவர் ஜாதகரின் தந்தை ஆவார்.தன் மகனின் 

ஜாதகத்தை கொடுத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.

ஜாதகர் ஆண்

ஜாதகரின்  வயது 33+.

 பிறந்த இடம்: பொள்ளாச்சி

வந்தவரின் நோக்கம் என்ன? என்பதை அறிய போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் இது.

அதற்கு 

ஜாம கிரகங்களின் நிலை எப்படி இருக்கும்?

அதற்காக பிரசன்னம் தந்த பதில் இதோ!

 இந்த ஜாதகருக்கு ஜாதகம் பார்த்த போது ஜாம கிரகங்களின் நிலை



பிரசன்னத்தின் உண்மை நிலை 

                         


ஜாதகம் பார்க்க வந்தவர் ஜாதகரின் தந்தை ஆவார்.தன் மகனின் ஜாதகத்தை கொடுத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.

ஜாதகர் ஆண் 

ஜாதகரின்  வயது 33+.

*வந்தவரின் நோக்கம் என்ன?* என்பதை அறிய போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் இது.

அதற்கு ஜாம கிரகங்களின் நிலை எப்படி இருக்கும்?

அதற்காக பிரசன்னம் தரும் பதில் .

*ஜாதகத்திற்குரியவர்  விவாகரத்து ஆனவர் என்பதும்* 

*அவருக்கு 2 வது திருமணம் செய்வது பற்றி கேட்கவே வந்துள்ளார் என்பதை பிரசன்னம் காட்டுகிறது*

எப்படி?

 *பிரசன்னம் வெளிப்படுத்திய ரகசியம் (சொன்ன பதில்)* 



*மகர உதயம்.* 

 *உதயத்தை கடந்த கோள் புதன்.* 

உதயத்தை புதன் கடந்து விட்டாலே ஜாதகர் திருமணமானவர் என்று பொருள். 

உதயத்திற்கு 12 ல் புதன் 

வந்தவர் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பதால் கவிப்பு நின்ற பாவம் மற்றும்  கவிப்பு எந்த கிரகத்தைக் கவித்துள்ளது என்பதை கொண்டு வந்தவரின் நோக்கத்தை அறிய முடியும்.

கவிப்பு நின்ற பாவம் 12ஆம் பாவம்.

அங்குள்ள ஜாம கிரகம் புதன்.

ஜாதகர் மனைவியை விட்டு பிரிந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. 

கவிப்பு புதனை அப்போதுதான் கடந்திருக்கிறது.


இதனை

ஜாம கிரகமான புதன் நின்ற பாகை 27 பாகையும்

கவிப்பு நின்ற பாகை 24பாகையும் உறுதிப்படுத்துகிறது.

வந்தவரின் நோக்கம் என்ன? என்பதை அவர் வெளிப்படுத்தாமலேயே இருக்கும்போது கவிப்பு தானாகவே அதனை வெளிப்படுத்துகிறது என்பதை இதன் மூலம் அறிய முடியும். 

மேலும் கவிப்பு 12ம் பாவத்தில் இருந்து 11ஆம் பாவத்தில் உள்ள *சுக்கிரனைக்* கவித்து இருக்கிறது.

பதினொன்றாம் பாவம் என்பது இளைய மனைவி அல்லது இரண்டாவது தாரம் என்பதை சுட்டிக்காட்டும்.

 *உதயாதிபதி சனி*

*உதயத்திற்கு ஒன்பதாம் வீடான கன்னி மனையில்.* 

உதயாதிபதி ஒன்பதாம் வீட்டுக்குச் செல்லும் போது *ஜாதகருக்கு இரண்டாவது திருமணத்தைப் பற்றிய கேள்வி* என்பது பிரசன்னம் காட்டுகிறது.

கன்னிமனை ஓர் உபய ராசி. அது இரட்டைப்படை ராசி என்பதால் இரண்டாவது திருமணத்தைக் கொடுக்கக்கூடியது என்றும் கொள்ளலாம்.

அப்படியானால் முதல் மனைவியின் நிலை என்ன? 

அதற்கு பிரசன்னம் தரும் பதில் 

முதல்தாரம் ஏழாம் வீட்டு அதிபதியைக் குறிக்கும்.

ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் எட்டில் மறைவு பெற்று இருக்கிறார்.இது

முதல் தாரம் வலுவிழந்த நிலையைக் குறிக்கிறது.

 

8ல் உள்ள சந்திரனால் முதல் தாரத்தால் பெருத்த அவமானம்,  நீடித்த துன்பம் ஏற்பட்டு பிரிவினையை ஜாதகர் சந்தித்திருக்கிறார். அதனை பன்னிரெண்டாம் வீட்டிலுள்ள புதன் உறுதிப்படுத்துகிறார். 12ஆம் வீடு பிரிவினையைச் சுட்டிக்காட்டும்.


எட்டாம் வீடு கோர்ட் கேஸ், வழக்கு நிலையைக் கொடுக்கும். அந்த இடம் சூரியனின் சிம்ம ராசி என்பதால் அரசால் வழக்கினை சந்தித்து ஒருவருக்கொருவர் பிரிவினையை சந்தித்து மணமுறிவை ஏற்படுத்தி இருக்கிறது.  

இருவரும் விவாகரத்தும் பெற்றுள்ளனர் என்பதை பிரசன்னம் தெளிவாக காட்டுகிறது.


விளக்கம் போதுமா ?




Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்