குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*
[19/04, 12:12 pm] S.Shanmuganandam🤴:
*குழந்தையின் கையில் இருந்த செல்போன் காணவில்லை.* அமெரிக்காவிலிருந்து தாயார் ஒருவரது கேள்வி.
*அது கிடைக்குமா?* ஞஞ்
அதற்கான பிரசன்னம்
[19/04, 5:09 pm] S.Shanmuganandam🤴:
ஜாமக்கோள் பிரசன்னத்தில் *see the picture, look at the picture* என்று இரு நிலைகள் உண்டு.
இதை பாகை அடிப்படையில் பார்க்கக்கூடிய நிலைப்பாடு.
இத்தோடு *SS VIEW* அதாவது *ஸ்பெஷல் சீன் வியூ* என்ற ஒரு நிலையும் உண்டு.
அதன் மூலம் பார்க்கும் போது மட்டுமே மிகத் துல்லியமாக பிரசன்னம் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையிலே இங்கே *SS VIEW முறையில்* பார்க்கும்போது சில வெளிப்படுத்தப்படாத விஷயங்கள் இங்கு உங்களுக்கு சொல்கிறேன்.
முதலாவதாக சந்தையில் கிடைக்கும் எளிதாக பயன்படுத்தி பார்க்கக்கூடிய சாப்ட்வேரில் *ஆருடம் பூஜ்ஜியம் கவிப்பு பூஜ்ஜியம் என்று வந்தால்* அந்த சமயத்தில் நீங்கள் *ஆருடத்தை 1 பாகை* என்றும் கணக்கில் கொண்டு *கவிப்பு 29 பாகையில்* இருப்பதாகக் கொள்ள வேண்டும்.
செல்போன் காணவில்லை என்று சொல்லியபோது ஆறு, எட்டு அதிபதியானவர் உதயத்தையோ ஆருடத்தையோ அல்லது கவிப்பையோ தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
6ஆமிடம் அல்லது அதன் அதிபதி மேற்கண்டவாறு இருக்குமெனில் *திருட்டு நடந்துள்ளது* என்றும்
8ஆமிடம் அல்லது அதன் அதிபதி மேற்கண்டவாறு எனில் *காணாமல் போயுள்ளது* என்றும் கொள்ள வேண்டும்.
3 மற்றும் 12 ஆமிடம் தொடர்பு எனில் பொருள் நம் பார்வையிலிருந்து தான் மறைந்துள்ளது என்று தான் கொள்ள வேண்டுமே தவிர பொருள் காணாமல் போயுள்ளது என்று கருதக்கூடாது.
ஜாமக்கோள் பிரசன்னத்தில் கூறப்பட்ட விதிகளின்படி இந்த பிரசன்னத்தில் உதயம், ஆருடம், உதயாதிபதி, ஆருடாதிபதி இவற்றில் கவிப்பு இல்லை என்றால் கேட்ட கேள்வி நடக்கும் என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்.
இந்த முறையில் பார்க்கும்போது குழந்தையின் கையில் இருந்த செல்போன் கிடைக்குமா? என்ற கேள்விக்கு பதில் *கிடைக்கும் என்று உறுதியாகிறது.*
----------------------
*கிடைக்கும் என்றால்* எப்போது கிடைக்கும்? என்று ஒரு கேள்வி எழுகிறது.
உதயத்தை கடந்த கோள் உதயத்தை நோக்கி வரும் போல் இவைகளை கொண்டு நாம் பதிலை கவனித்து சொல்ல வேண்டும்.
உதயத்திற்குள் அந்த கோள் இருந்தால் மட்டும் அது உதயத்தை நோக்கி வருவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி அல்லாமல் உதயத்திற்கு அடுத்த பாவத்தில் உள்ள ஜாம கிரகத்தை கணக்கு எடுக்க வேண்டியது இல்லை.
ஆனால் நடந்த நிகழ்வு பற்றிப் பார்க்கும் போது உதயத்தை கடந்த கோள் முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில் உதயாதிபதியாகிய சந்திரன் உதயத்தைக் கடந்து மிதுன ராசியில் 17.30 பாகையில் நிற்கிறார்.
மிதுன ராசி ஒரு உபய ராசி.
இரட்டைத் தன்மைகளை கொண்டு செயல்படக் கூடியது.
மிதுன ராசி முதல் 15 பாகை வரை ரிஷபத்தோடு இணைந்து செயல்படும். பின் உள்ள 15 பாகை அதாவது 16 முதல் 30 பாகை உள்ள ராசி மண்டலமானது கடக ராசியோடு இணைந்து செயல்படும்.
அப்படி பார்க்கும்போது உதயாதிபதி சந்திரன் மிதுன ராசியில் 17.30 பாகையில் இருப்பது சந்திரன் கடகத்தில் இருப்பது போலத்தான் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதயத்திலேயே சந்திரன் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரசன்னத்தில் உதயத்தில் சந்திரன் இருப்பின் அதுவும் வளர்பிறை சந்திரனாக இருப்பின் கேட்ட கேள்வி மிக விரைவாக நடந்துவிடும் என்று நாம் தெட்டத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இவைகளைக்
கொண்டு பார்க்கும் போது......
......கேட்ட கேள்வி மிக விரைவில் நடந்துவிடும் என்று தெரியலாம்.
அவ்வாறெனில் மேற்படி *SS VIEW நிலை* யைக் கொண்டு பார்க்கும் போது *செல் போன் கிடைத்துவிடும் என்று உறுதியானது.*
--------------------------
சரி செல்போன் இப்போது எங்கே இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது?
பொருள் இருக்கும் இடம் உதயத்திற்கு நான்காம் வீடாகும்.
இந்த பிரசன்னத்தில் உதயத்திற்கு நான்காம் வீடு துலாம் மனை அது சுக்கிரன் வீடு. சுக்கிரனின் காரகத்துவம் வீடு, மனை, வண்டி. வாகனம் என்று குறிப்பிடுவதால் *செல்போன் காருக்குள்ளேயே* தான் இருக்கிறது.
வண்டிக்குள் எங்கே இருக்கிறது என்பதை எப்படி அறிவது இங்கே பார்த்தால் பிரசன்னத்தில் *புதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்கள்.*
அப்படியானால் மூன்றாவது அதிபதி உச்சமாகவும் நான்காம் அதிபதி ஆட்சியாகவும் இருப்பதால் பொருள் அழிவு பெறாமல் அப்படியே இருக்கிறது என்று அர்த்தம்.
மேலும் துலாம் மனையில் புதன் இருப்பதால் புதன் புத்தகம், தகவல் தொடர்பு, பத்திரம், கடிதம்
ஆகியவற்றையெல்லாம் குறித்தாலும் உயிர் காரகத்தில் இளைய, சிறிய குழந்தையைக் குறிக்கும்.
அப்படி பார்க்கும் போது சுக்ரனின் காரகமான *அமரும் இருக்கை* என்று நாம் இங்கே வண்டியில் உள்ள *குழந்தை அமர்ந்த இருக்கையில் அதன் அடியில் இருக்க வேண்டும்* என்று கொள்ளலாம்.
பொருள் இருக்கும் இடத்தை நாம் தெரிந்து கொண்டோம்.
---------------------
[19/04, 5:10 pm] S.Shanmuganandam🤴: அந்த பொருளாகிய செல்போன் எப்போது கிடைக்கும்?.
இப்போது *சம்பவ கால நிர்ணயத்தைப்* பார்க்க வேண்டும்.
*சூக்கும ராசி* அதற்கு கை கொடுக்கும்.
ஆருடாதிபதி ஆருடத்திற்கு எத்தனையாவது வீட்டில் அமர்ந்திருக்கிறதோ அந்த வீட்டில் ஆருடம் நுழையும் போல் பொருள் கிடைத்துவிடும்.
அப்படி பார்க்கும்போது *ஆருடாதிபதி புதன்* ஆருடத்திற்கு இரண்டாம் வீட்டில் உள்ளார்.
ஆருடம் ஒரு வீட்டை (ராசியை) கடக்க ஐந்து நிமிடம் எடுத்துக் கொள்ளும்.
அந்த வகையில் கேள்வி கேட்ட நிமிடத்தில் இருந்து ஐந்து முதல் பத்து நிமிடத்திற்குள்ளாக செல்போன் கிடைத்துவிடும் என்று உறுதியாக சொல்லப்பட்டது.
------------------------
[19/04, 5:29 pm] S.Shanmuganandam🤴: *நடந்தது என்ன?*
குழந்தை அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழே அடியிலிருந்து செல்போன் கிடைத்திருக்கிறது.
செல்போன் கிடைத்த நேரம் இரவு 9.31மணி.
அதாவது பிரசன்னம் போட்ட 6 வது நிமிடத்தில் செல்போன் கிடைத்துவிட்டது.
தொலைந்த புதையலை மீண்டும் கண்ட மகிழ்ச்சி அந்த பெண்மணி அடைந்து தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் அழுது கொண்டே தெரிவித்துக் கொண்டார்.
*என்னே ஜாமக்கோள் பிரசன்னத்தின் அற்புதம்!*
*கிரகங்களின் மாயாஜாலம்*
*ஜாமக்கோளின் வண்ணக்கோலம்*
மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்!
*வாழ்த்துக்கள்*
நன்றி,
வணக்கம்!🙏
என்றும் அன்புடன்
திரு.S.ஷண்முகானந்தம்*M.A.B.Ed.Rtd.Hm*
*பொள்ளாச்சி*
*9965728932*




Comments
Post a Comment