நீர் பிரசன்னம் & எத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும்?

 நீர் பிரசன்னம்


 *ஃபோர் போடலாமா? தண்ணீர் நன்கு வருமா?

அதற்கான பிரசன்னம்



இந்த பிரசன்னத்தின் கேள்வி:


 *ஃபோர் போடலாமா? தண்ணீர் நன்கு வருமா?* 


பதில்: போர் போடலாமா? என்ற கேள்விக்கு பிரசன்னம் தரும் பதில்.

ஆருடம் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டுவது. அந்த வகையிலே ஆருடம் வேலி ராசி என்று சொல்லக்கூடிய நீருள்ள ராசியில் விழுந்திருக்கிறது.


ஆருடாதிபதி சுக்கிரன் உதயத்திற்கு பத்தாம் வீட்டில் உச்சமாக இருக்கிறார். எனவே நீர் கிடைக்கும் .அதன் சுவையும் இனிமையாக தித்திப்பாக இருக்கும் அதற்கு காரணம் சுக்கிரனின் சுவையே.


 ஆருடம் சாராசியில் துலாம் ராசியில் விழுந்திருப்பதால் மிக விரைவாக அந்த வேலை செய்தால் நீர் கிடைக்கும்.


ஓகே.

 உதயம் மிதுனம் என்பதால் அதன் அதிபதி புதன் உதயத்திற்கு பத்தாம் வீட்டில் இருப்பதால் அந்த செயல்பாடு நன்றாகவே நடக்கும். அதுவும் சாராசி மிக மிக விரைவாக செயலாக்கத்திற்கு வரும். அதே சமயம் இருவிதமான செயல்கள் அங்கே நிகழும்.


 சரி உதயத்திற்கு 7 ,10 க்கு உரிய குரு உதயத்தில் இருக்கிறார். உதயத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் பாகையில் இருக்கிறார். உதயத்திலிருந்து 7 கலைகள் மட்டுமே விலகி நிற்கிறார்.

எனவே நீர் நிச்சயமாக கிடைக்கும். வாடிக்கையாளர் எதிர்பார்த்தது போலவே இந்த செயல் நடைபெறும் என்பதை உறுதியாகிறது.


அதே சமயம் குரு உதயத்தில் இருப்பதால் சுபமான நிகழ்வாகவே இருக்கும். கூடவே அவர் பாதகாதிபதி ஆகவும் இருப்பதால் பணப் பிரச்சினை ஏற்படும்.முன்கூட்டியே கவனமாக இருக்கவும் என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டது.

மேலும் உதயம், ஆருடம், உதயாதிபதி, ஆருடாதிபதி நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

 கவிப்பில் இல்லை.


 ஆருடத்தில் பாம்பு அது மட்டுமே  சிறிது தடையைக் காட்டுகிறது.


 7க்குரிய வாடிக்கையாளர் என்று சொல்லக்கூடிய இந்த கேள்வியாளருடைய செயலை செயல்படுத்தக்கூடிய நபர் ஏதாவது பிரச்சனையை காட்டலாம்.


 *இரண்டாவது கேள்வி தண்ணீர் நன்கு வருமா?* 


உதயத்தில் குரு இருப்பதும் ஆருடாதிபதி சுக்ரன் உதயத்திற்கு பத்தாம் வீட்டில் உச்சமாக இருப்பதும் அவர் அமர்ந்து இருக்கக்கூடிய ராசி நீர் ராசியாக இருப்பதாலும் ஆருடமும் நீர் ராசியாக இருப்பதாலும் வேலி ராசியாக நிச்சயமாக உள் வட்டத்தில் நீர் ராசியில் சந்திரன் இருப்பது *நிச்சயமாக உறுதியாக தண்ணீர் நன்கு வரும் என்று தெளிவாகச் சொல்லலாம்.* 


 *அடுத்தது வாடிக்கையாளர் கேட்காத கேள்வி.* 


 *நீர் கிடைக்கும் என்றால் எத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும்?* 

எ‌ன்று நானே கேள்வி கேட்டுக் கொண்டு இது போடப்பட்டது.


இதற்கான கணிதம் தனி.


 *இதற்கான பதில்* 

*ராசி கதிர்கள் மற்றும்*

 *கிரக கதிர்களைக் கொண்டு  அறியலாம்*.* 


உதயம் மிதுனம்                5

உதயத்தில் குரு              10

உதயத்தை பார்க்கும் கிரகம் சந்திரன்.              21

மொத்தம்.                          36

கவிப்பில் சந்திரன்

எனவே சந்திரனுடைய கதிர்களை எடுக்க வேண்டாம்.


ஃ36 - 21 = 15


ஆக 15 என்பது காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப 150 அடியில் இருந்து 200 அடிக்கு உள்ளாக நீர் வரும் என்று சொல்லலாம்.

             -------------------------------------------------

                       *நடந்த நிகழ்வு* 


வாடிக்கையாளர் போன் செய்து போர் போட்டு விட்டோம் 125 அடி ஆழத்தில் தண்ணீர் வந்துவிட்டது என்றார் நீங்கள் கூறியபடி முதல் நீரை எடுத்து விநாயகருக்கு அபிஷேகம் செய்துவிட்டோம் என்று கூறினர்.


 ஆழ்துளை ஃபோர் போடும் போது அவர்கள் கேட்ட பணம் ஒன்று. வேலை முடிந்த பின்பு அவர்கள் கேட்ட பணம் ஒன்று.

 அதிகமாகவே பணம் தரவேண்டும் என்று பேச்சு மாறி பணம் கேட்டு வாங்கி பெற்றனர்.

இரண்டாம் அதிபதி சந்திரன் ஏழில் கவிப்பிலிருந்து பேச்சு மாறி செயல்பட்டது இங்கே எடுத்துக்காட்டுகிறது.

முன்கூட்டியே கவனம் தேவை என்று வாடிக்கையாளருக்கு ஏற்கனவே சொல்லப்பட்டு இருந்தது.

அதுதான் இப்போது இங்கே நடைபெற்றது.

 *வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்*

Comments

Popular posts from this blog

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

மறுமணம் சார்ந்த பிரசன்னம்*

கவிப்பு கவித்த ஜாம கிரகத்தைக் கொண்டு எந்த விஷயத்தை நாம் தேர்ந்தெடுப்பது?