கிரிக்கெட் சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

 கிரிக்கெட் சீசன் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



2024 இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல் 17 என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் டாடா ஐபிஎல் 2024 என்றும் முத்திரை குத்தப்பட்டது) என்பது இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது பதிப்பாகும் , இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ஆகும் [1] இந்தப் போட்டியில் பத்து அணிகள் பங்கேற்கின்றன மற்றும் 2024 மார்ச் 22 முதல் மே 26 வரை நடைபெறுகின்றன [2]


இதனையொட்டி கிரிக்கெட் ரசிகஅன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குழுவில் சில விளையாட்டுக்கு முன்னதாக பிரசன்னம் போடப்பட்டு அதற்கான பதிலும் விளக்கமும் கொடுக்கப்பட்டது.

அவைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 *கிரகங்களின் மாயாஜாலம் கண்டு களிப்பது ஒரு அலாதியான சுகம் தானே!* 

 *படியுங்கள்! 

ரசிக்கலாம்!! மகிழலாம்!!*

          ‌‌ +++++++++++++++++++++++



முதல் பிரசன்னம் 

*22/9/2024 வெள்ளிக்கிழமை*

 *தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சில் பெங்களூர் அணி வெற்றி பெறுமா? அல்லது சென்னை அணி வெற்றி பெறுமா...?* 

முதலில் பேட் செய்து கொண்டு இருப்பது பெங்களூரு அணி.

அதற்கான பிரசன்னம் இதோ 👇🏻



*மேஷ உதயம்,* 

இங்கு *உதயம் பெங்களூர் அணி*

 என்றும்

 *7ஆம் இடம் துலாம் சென்னை அணி* 

என்று எடுத்தேன், 

 *கவிப்பு*

12 ஆம் பாவத்தில்.

கவிப்பு புதனைக் கவித்திருக்கிறது.


உதயம், 7 ஆம் பாவம், உதயாதிபதி செவ்வாய்,

ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆகியோர் கவிப்பில் இல்லை.


பொது விதியின்படி வெற்றி பெறுவது யார்?


*உதயத்தை ஜாம கிரகம் குரு கடந்து சென்று விட்டார்*.

7ஆம் இடத்தில் சந்திரன். 

ஆகவே எதிர் அணியான சென்னை அணி வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது.

 *அதாவது சென்னை அணி வெற்றி பெறும்.* என்று சொல்லப்பட்டது.


நடந்தது என்ன?

 *சென்னை அணியே வெற்றி பெற்றது.*

                 --------------_------------------------------

2 வது பிரசன்னம் 


*23/3/2024. சனிக்கிழமை* 

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது இப்பொழுது கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

 கொல்கத்தா அணி முதலில் பேட் செய்து கொண்டிருக்கிறது. இதில் எந்த அணி வெற்றி பெறும்...?

அதற்கான பிரசன்னம் இதோ 👇🏻




*உதயம் ரிஷபம்.(சுக்கிரன்)* 
இது கொல்கத்தா அணி.
உதயாதிபதி சுக்கிரன் 11ல் உச்சம்.
 *கொல்கத்தா அணி நல்ல வலுவான நிலையில் இருக்கிறது.* 

 *உதயத்துக்கு 7 ஆமிடம் விருச்சிகம்  எதிரணி யாகிய ஹைதராபாத் அணி* 

 *7 ஆம் அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம்* 

எதிரணியாகிய ஹைதராபாத் அணி வலுவிழந்து போய் விட்டது.

உதயாதிபதி சுக்கிரன் உச்சமாகி 11ல் கவிப்பில் சிக்கியிருக்கிறது.

ஆட்டம் மிகவும் கடினமாக இருக்கும்.

உதயாதிபதி சுக்கிரன் 11ல் இரட்டை படை ராசியான மீனத்தில் கவிப்பில் சிக்கியுள்ளார்.அதனால் இருவிதமான நிலையில் அவரது செயல்பாடுகள் மயிரிழையில் வெற்றி அல்லது தோல்வி அமையும் என்று சொல்லப்பட்டது.

 *நடந்தது என்ன?*

24/03, 7:56 am] S.Shanmuganandam🤴:

*நேற்றைய விளையாட்டில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.* 


உதயாதிபதி சுக்கிரன் உச்சமாகி 11ல் கவிப்பில் சிக்கியிருந்தும் உதயமான கொல்கத்தா அணி வெற்றி பெற்றது எனில்.....
அதற்கு காரணம் *உதயத்தை நோக்கி குரு வந்ததே வெற்றி தேடி வந்தது என்று தெரிகிறது* .

                         ++++++++++++++++++

அன்பர் ஒருவர் ஆதங்கம்

*Jamam Vijay* 

ஐயா வணக்கம்....

 ஜாமக்கோள் பிரசன்னம் நடந்த / நடந்து கொண்டிருக்கின்ற/நடக்கப் போகின்ற அனைத்து விஷயங்களையும் கண்ணாடி போல் கூறிவிடும்... 


நமக்குத்தான் பார்க்கத் தெரிவதில்லை....

உதாரணத்திற்கு ஆராய்ச்சிக்காக போடப்பட்ட இந்த பிரசன்னத்தை எடுத்துக் கொள்வோம்....


Hobby க்காகப் போடப்பட்ட பிரசன்னம் அல்ல. உணர்வுடன் போடப்பட்ட பிரசன்னம்... ஆதலால் பதில் அதிலேயே இருக்கிறது....

முதலில் கேள்விக்கான பதில் என்பதில் கவனத்தை நாம் செலுத்த வேண்டும்...

கேள்வியை நன்றாக கவனித்தால் கேள்வி என்னவெனில் முதலில் பேட் செய்ய துவங்கிய அணி கொல்கத்தா அணி என்று பதிவிட்டிருந்தேன்...


 முதலில் பேட் செய்ய துவங்கிய அணியை உதயம் என்று கணக்கில் கொள்ள வேண்டும்....


 அதற்கு எதிரான அணி அதிலிருந்து ஏழாம் பாவகம்.... 


உதயாதிபதி சுக்கிரன் 11 உச்சம்...

உதயத்தை நோக்கி வரும் கிரகம் குரு....


உதயத்திற்கு ஏழாம் பாவமான விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம்....

அதாவது எதிரணி...

ஒரு சில இடங்களில் பேட் செய்யத் துவங்கிய அணியை உதயமாக எடுத்துக்கொண்டு அதன் எதிர் அணியை ஆருடமாக ...எடுத்துக் கொள்வர்...

 *இறுதியில் முதலில் பேட் செய்யத் துவங்கிய கொல்கத்தா அணி வெற்றி பெற்றது...*

                 _______________________________

3வது பிரசன்னம் 

*24/3/2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.57க்கு

Jamam Vijay போட்ட பிரசன்னம்* 👆

IPL cricket: தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ அணியும் விளையாடிக் கொண்டிருக்கிறது... ராஜஸ்தான் ராயல் அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறது இதில் எந்த அணி வெற்றி பெறும்...?

அதற்கான பிரசன்னம் இதோ 👇🏻





*உதயம்  தனுசு.(குரு)* 
இது *ராஜஸ்தான் ராயல்ஸ்* அணி அணி.

உதயாதிபதி குரு 4ல் ஆட்சி.
  *ராஜஸ்தான் ராயல்ஸ்* அணி நல்ல வலுவான நிலையில் இருக்கிறது.* 

 *உதயத்துக்கு 7 ஆமிடம் மிதுனம் (புதன்) எதிரணியாகிய லக்னோ அணி* 

 *7 ஆம் அதிபதி புதன் மகரத்தில் கவிப்பில்* 

எதிரணியாகிய *லக்னோ அணி* வலுவிழந்து போய் விட்டது.

உதயாதிபதி குரு ஆட்சியாகி 4ல் மீனத்தில் வலுவாயிருக்கிறது.

எனவே *ராஜஸ்தான் ராயல்ஸ்* அணியே
வெற்றி பெறும் 
என்று சொல்லப்பட்டது.

 *நடந்தது என்ன?*

24/03, 7:56 am] S.Shanmuganandam🤴:
*இரவு 7.30 மணிக்கு Result* 
*நேற்றைய விளையாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.* 
** .....👍👍👍

_________________________

4வது பிரசன்னம்


*24/3/2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.11 மணிக்கு திருமதி சுக்கிரன் லட்சுமி அவர்களால் இந்த பிரசன்னம் போடப்பட்டது* 

GT vs MI யாருக்கு வெற்றி?*

அதற்கான பிரசன்னம் இதோ 👇🏻




குழுவிலிருந்து நண்பர்கள் இந்த பிரசன்னத்திற்கு பதில் கூறியிருந்தார்கள்.


[24/03, 8:28 pm] Sukran Rr Mohankumar:
 *இன்றைய போட்டியில் ஜிடி வெற்றி பெறும்.* 

[24/03, 8:28 pm] Sukran Bhuvaneswari K:
 *MI அணி வெற்றி பெறும்.* 

[24/03, 8:46 pm] Sukran Kumar Madurai:
 *GT அணி வெற்றி பெறும்* 

[24/03, 9:18 pm] +91 99945 03581: *Yes MI will win* 

[24/03, 9:22 pm] Sukran Lakshmi Gcc Job Services:
 *MI will win*


விளையாட்டின் முடிவு *அன்றைய தினம் இரவு 11.21 மணிக்கு  GT அணி வெற்றி பெற்றது* என்று sms அனுப்பி வைத்தனர்.


: *Sukran Lakshmi* 

பெரும்பான்மையோர் MI வெற்றி பெறும் என்று கூறினோம் *.ஆனால் GT முடிவில் வென்றது* 


.GT வெற்றி பெற்றதற்காக காரண காரியங்கள் பிரசன்னத்தை வைத்து  யாரேனும் பதில் கூற முடியுமா?

என்று அப்போதே பிரசன்னம் போட்ட லட்சுமி அவர்கள் கேட்டார்கள்.


அதற்கான விளக்கத்தை நான் கூறினேன்.

[25/03, 12:16 am] S.Shanmuganandam🤴:


 *உதயம் GT* 

 *7ஆமிடம் எதிரணி (MI)* 

*உதயாதிபதி சுக்கிரன் 3 ல்* 

உதயம் மற்றும் உதயாதிபதி சுக்கிரன் கவிப்பில் இல்லை.

அதேபோல் 7ஆமிடம் அதிபதி செவ்வாய் கவிப்பில் இல்லை.

ஆனால் அவர் 8ல் மறைவு.

8ஆமிடம் பேரிழப்பு பெரும் துன்பம்.

 *எதிரணி MI வெற்றி வாய்ப்பை இழந்தது.* 


 *அதனால் GT வென்றது.*

இப்போது விளையாட்டின் முடிவை பிரசன்னம் தெளிவாகச் சுட்டிக்காட்டி விட்டது என்பது தெரிகிறதா?


 *வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!

கிரகங்களின் மாயாஜாலம்!

ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!! 


     ++++++++++++++++++++++++++++++++++




Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்