பொய்யான வழக்கு... வாய்மையே வெல்லும்

 


பொய்யான வழக்கு... வாய்மையே வெல்லும்!

*வாடிக்கையாளர் கேள்வி* 

வாடிக்கையாளர் பெயர்: விஜய சந்தர், வயது 59,

 அரசு மருத்துவமனையில் ஒரு உயர் பதவியில் இருக்கிறார். தனது தலைமையின் கீழ் வேலை செய்யும் ஒரு திருமணமான மத்திம வயது உடைய பெண்ணால் தவறான வழக்கு புனையப்பட்டு  துறை ரீதியான  விசாரணை நடக்க இருக்கும் நிலையில் நாளை தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா?


பின்குறிப்பு:- இவர் தவறு செய்ததற்கான சிசி டிவி ஆதாரமோ செல்போன் உரையாடல்களோ ஏதுமில்லை. இருந்தாலும் அவர் இப்பொழுது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்.  தவிரவும் அந்தப் பெண்ணின் மேல் இரண்டு வருடத்திற்கு முன் ஒரு போர்ஜரி வழக்கு நடந்து துறை ரீதியான தண்டனையில் அந்தப் பெண் இருந்திருக்கிறார்.


 *அவருக்காக போடப்பட்ட பிரசன்னம் இது.* 

.



 *பிரசன்னம் காட்டும் தகவல்கள் உண்மை நிலை🤴:
 தன்மீது போடப்பட்ட வழக்கு *பொய்யான வழக்கு என்று வாடிக்கையாளர் சொல்லி இருக்கிறார். இது உண்மைதானா? என்று எப்படி நாம் பிரசன்னத்தின் மூலம் தெரிந்து கொள்வது?*

பொய்யான வழக்கு என்பது மூன்றாம் இடத்திற்கு உரியவர் கவிப்பில் மாட்டியிருக்க வேண்டும்.
 அதே சமயம் அந்த மூன்றாம் அதிபதி புதனாக இருக்க வேண்டும்.

தகவல் தொடர்பு அனைத்துக்கும் உரியவர் புதன் ஆவார். அவர் மூன்றாம் இடத்திற்கு உரியவராகி கவிப்பில் இருந்தால்... *கொடுக்கப்பட்ட தகவல் வழக்கு பொய் என்பதை உறுதி செய்யலாம்*

இந்த பிரசன்னம் அவ்வாறுதான் காட்டுகிறது.

சரி. விஷயத்திற்கு வருவோம்.

*கடக உதயம்* , 

 *உதய அதிபதி சந்திரன் 9ஆம் பாவத்தில்..* 

 *ஆருடம் 10ல் மேஷம் ,*

 *அங்கு 7ஆம் அதிபதி சனி நீச்சம் பெற்ற நிலையில்...*

 **கவிப்பு*
வாக்கு ஸ்தானமான *இரண்டாம் பாவத்தில்*** 

 உதயத்தை கடந்து 3,12 க்கும் உரிய புதன். அதனால் ஏற்கனவே புகார் செய்யப்பட்ட நிலை...
 
 மேலும் வம்பு வழக்கை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் இரண்டாம் அதிபதி சூரியன்.. 

அரசு காரக கிரகமும் சூரியன் 6ஆம் பாவத்தில்..  

*3 ஆம் அதிபதி புதன்* *கவிப்பில்* இருப்பது பொய்யான வழக்கு என்று பிரசன்னம் சுட்டிக் காட்டுகிறது.

*ஆருடம் 10ல் மேஷம் ,*

*ஆருடம் என்பது நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டுவது.
மேஷம்  ஒரு சர ராசி. ஆக வழக்கு நடந்து வருகிறது என்று தெரிகிறது.

இங்கு இருவர் சார்ந்த கேள்வி, 

கேள்வியாளர் வாதி.அவர்உதயம்.
வழக்கு தொடுத்த நபர் 7ஆமிடம் 

 *உதயத்திற்கு 7ல் பாம்பு ,* அந்த பெண்மணியும் (நல்ல நபர் இல்லை) பிரச்சனைக்கு உரியவரே...

 *முடிவு என்ன?*


 *தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்குமா? என்பது தான் வாடிக்கையாளரின் கேள்வி.* 

*பிரசன்னம் தரும் பதில்* 👇

 கேள்வியாளர் கடக உதயம் என்பதால் ,அதன் அதிபதி சந்திரன் உதயத்துக்கு

9 ஆம் வீடான மீனத்தில் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து பலம் பெற்று விட்டார்.

அத்தோடு *ஒன்பதாம் அதிபதி குரு பகவான் உதயத்தை நோக்கி வருவதால் வழக்கு முடிவுக்கு வந்து கேள்வியாளருக்கு சாதகமான தீர்ப்பாக அமையும். சுபமான நிகழ்வாக தீர்ப்பு வந்து வேதனைப்பட்ட அவருக்கு மனமகிழ்ச்சியைத் தரும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.* 


எதிராளி என்று சொல்லக்கூடிய நபர் ஏழாம் வீட்டுக்கு அதிபதியாவார்.

கடகத்துக்கு ஏழாம் வீடு என்பது மகர மனையாகும்.

அந்த இடத்தை எதிராளியாகக் கொண்டு பார்க்கும் போது மகர மனையின் அதிபதி *சனி பகவான் தன்மனைக்கு நான்கில் மேஷத்தில் நீசமாக இருக்கிறார்.* 


எனவே பிரசன்னத்தின் மூலம் பார்க்கும்போது எதிராளி வலுவிழந்து இருக்கிறார் என்று காட்டுகிறது. 


எதிராளி என்று சொல்லக்கூடிய சனி பகவான் நீசமானதால் *வழக்கு தொடர்ந்த பெண்மணிக்கு சாதகமாக தீர்ப்பு வராது என்பது உறுதிப்படுத்துகிறது.* 

வழக்கு தொடுத்த எதிராளி தோல்வியடைவார் என்பதையும் பிரசன்னம் எடுத்துக்காட்டுகிறது.


 *வழக்கு தோல்வியைச் சந்திக்கும்.*

                                     *****************************

            *நடந்தது என்ன?*👇

இன்று 22/3/2024 வெள்ளிக்கிழமை
*மருத்துவ அதிகாரி அவர்களுக்கு  சாதகமாக தீர்ப்பு வந்தது.* 

பொய் வழக்கு தொடர்ந்த குற்றம் சாட்டிய பெண்மணியிடம் போதிய ஆதாரங்கள் இல்லை

. ஆனால் மருத்துவ அதிகாரி அவர்களிடம் தன் மேல் குற்றமில்லை என்று நிரூபிக்கக்கூடிய ஆவணங்களையும், அந்தப் பெண் ஏற்கனவே போர்ஜரி செய்ததற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்து இருக்கிறார்.


 *இதைப் பார்த்த விசாரணை அதிகாரி  மருத்துவ அதிகாரி  மேல் ஒரு குற்றமும் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டார்.*

உதயத்தை நோக்கி ஒன்பதாம் அதிபதி குரு பகவான். ஆகவே முடிவு சுபமாகவே இருந்தது. 


எட்டாம் அதிபதி சனி பகவான் நீசம். வழக்கு ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது. 


கவிப்பு கவித்த கிரகம் புதன். இந்த வழக்கில் ஆவணங்களே பேசியது. எதிர் தரப்பிடம் சுத்தமாக ஆவணங்களோ ஆதாரங்களோ இல்லை.


 ஆனால் மருத்துவ அதிகாரி தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கத்தக்க ஆவணங்களையும் ஆதாரங்களையும் வைத்திருந்தார்.

கேள்வியாளருக்கு சாதகமான தீர்ப்பாக அமைந்தது. சுபமான நிகழ்வாக தீர்ப்பு வந்து வேதனைப்பட்ட அவருக்கு மனமகிழ்ச்சியைத் தந்தது . 

நடந்த நடக்கப் போகின்ற நிகழ்வை மிகத் துல்லியமாக அளிக்கும்  ஜாமக்கோள் பிரசன்னம்  வாழ்க!


 *கிரகங்களின் மாயாஜாலம்!!* 

 *ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!!* 

 *எண்ணக் கோலம்!!* 


 *........ஜாலம் தொடரும்* 

 🙏🙏🙏


Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்