*ஜாமக்கோள் பிரசன்னம்*- *சர்ப் எக்ஸல் போட்டு அலசுதல் எப்படி?*
அனைவருக்கும் வணக்கம்.🙏
நேற்றைய தினம் ஒரு பிரசன்னத்தை கொடுத்து அதில் கேள்வியும் கேட்கப்பட்டு அந்த பிரசன்னத்திற்கான பதிலை கொடுக்கும்படி உங்களிடம் கேட்டிருந்தேன்.
ஜாமக்கோள் பிரசன்னம் *சர்ப் எக்ஸல் போட்டு அலசுவது எப்படி?* என்றும் கேள்வி கேட்டு இருந்தேன்.அதற்கான பதிலை இன்று உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
என்ன! சர்ப் எக்ஸல் போட்டு அலசுவதா?
புதிதாக இருக்கிறது.
கேள்விப்பட்டதே இல்லையே என்று உங்களுக்கு தோன்றுகிறதா?...!! படித்து பாருங்கள். உங்களுக்கு விவரம் தெரியும்.
இதன்படி பிரசன்னத்தை நீங்கள் பார்க்க பழகினால் உங்கள் பார்வையில் உள்ள கறை நீங்கிவிடும்.
கரை போயே போச்சு உண்மை என்னவென்று *பளிச்சென்று* தெரிந்துவிடும்.
சரி. பிரசன்னத்தை எப்படி போட்டு அலசுவது?
வாருங்கள். எப்படி அலசுவது? என்று பார்ப்போம்.
*ஜாமக்கோள் பிரசன்னம்*- *சர்ப் எக்ஸல் போட்டு அலசுதல் எப்படி?*
*ஜாமக்கோள் பிரசன்னம்*-இதோ!
கேள்வி:
பறவைகளை வளர்க்கலாமா? (லவ் பேர்ட்ஸ் வளர்க்கலாமா?)*
சித்தர் போற்றி!
சிவம் போற்றி!
எல்லாம் வல்ல வாலைத்தாயே போற்றி!
அன்னை காமாட்சியின் பொற்பாத கமலங்களை வணங்கி முழுமுதற்கடவுளாம் விநாயகப் பெருமானைத் தொழுது நவகோள்களின் துணையோடு ஜாமக்கோள் பிரசன்னத்திற்கு பதில் உரைக்க குருவருளும் திருவருளும் துணை புரியுமாக!!
**ஜாமக்கோள்* *பிரசன்னத்தில்*
*எப்படி பதில் கண்டறிவது?**
சற்று கவனித்து பாருங்கள் படியுங்கள்
இந்த முறையில் நீங்கள் பின்பற்றி வந்தால் நீங்கள் பிரசன்னத்தில் கைதேர்ந்த வல்லுனராக மாற முடியும்.
*கேள்வி:
பறவைகளை வளர்க்கலாமா? (லவ் பேர்ட்ஸ் வளர்க்கலாமா?)*
*உதயம்: மகரம்*
*ஆருடம்* உதயத்திற்கு 10ல் துலாம்
*கவிப்பு* உதயத்திற்கு எட்டாம் வீட்டில் சிம்மம்
உதயம் விழுந்திருப்பது *மகரம்* என்னும்போது ராசிக்காரகத்துவத்தை கவனிக்க வேண்டும்.
இங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.
அதைத் தாண்டி மற்ற விஷயங்களுக்கு செல்லக்கூடாது.
அதேபோல நாம் பார்ப்பது *ஜாமக்கோள் பிரசன்னம்* மட்டும்தான். ஜாதகம் போல பிறவற்றைப் பார்க்க கூடாது.
இங்கே *ஜாமக்கோள்களை* வைத்துத் தான் பலன் கூறப்படுகிறது. எனவே *உள்வட்டத்தில் இருக்கும் கோச்சார கிரகங்களை நீங்கள் கவனிக்கக் கூடாது.*
கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளித்தால் போதும்.
கேள்வி எழுந்த உடனேயே பதிலும் கூடவே வந்து விடும் ஜாமக்கோள் பிரசன்னத்தில்.
அதுதான் இந்த பிரசன்னத்தின் *ஹைலைட்* ஆகும்.
சரி
*உதயம் மகரம்* என்பதால் மகர ராசியின் ராசிக்காரகத்துவத்தை கவனிக்கும்போது கேட்கப்பட்ட கேள்விக்கு ஒட்டியே உதயமும் விழுந்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளும்போது ஆச்சரியப்படுவீர்கள்.
எப்படி? என்றால் இதுவரை நீங்கள் பொருட்கள் காணவில்லை, மனிதர்களின் வாழ்க்கை முறையில் அவர்கள் சந்திக்கக்கூடிய படிப்பு, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப் பேறு என பல விஷயங்கள் பற்றி பிரசன்னத்தில் கேட்டிருப்பார்கள்.
இப்போது இதற்கு மாறாக இங்கே பறவைகளைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பறவைகள் என்று சொல்லும்போது பறப்பன இனத்தைச் சேர்ந்தவை.
எனவே பிரசன்னம் பறப்பன ராசியைக் கொண்ட *பறவை கால் ராசியான மகரத்தில் *உதயம்* விழுந்திருக்கிறது*
ஆகவே வாடிக்கையாளர் என்ன மனநிலையில் கேள்வி கேட்டிருக்கிறார் என்பதை பிரசன்னம் உள்வாங்கிக் கொண்டுதான் பதிலை நமக்கு கொடுக்கிறது என்று நாம் தெட்டத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்குதான் *இயற்கையின் அற்புதம்!! அதிசயங்கள்!!!* இந்த பிரசன்னத்தில் நாம் தெரிந்து கொள்ள முடியும். பார்க்க முடியும்.
அடுத்ததாக *கேட்கப்பட்ட கேள்வி சரியா? என்று சரிபார்த்தல்.*
*அந்தக் கேள்வி பிரசன்னத்தில் தொடர்பு கொண்டிருக்கிறதா?*
என்பதை சரிபார்க்கும் முறையாகும். அப்படி தொடர்பு இருந்தால் விடையும் சரியாக வரும். அந்த வகையில்...👇
உதயம் மகரம். அது சர ராசி. எப்போதும்
இயங்கிக் கொண்டிருக்கக் கூடியது.
அந்த வகையிலே ராசியின் தன்மை இங்கே வெளிப்படுகிறது.அதாவது பறவைகள் எப்போதும் சுறுசுறுப்பாக துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உதயம் சுட்டிக்காட்டுகிறது.
அது மட்டுமல்லாமல் உதயாதிபதி *சனி பகவான்* உதயத்திற்கு இரண்டில் தன் வீட்டிலேயே கும்பத்தில் ஆட்சி பெற்று பலமாக இங்கு அமர்ந்து இருக்கிறார்.
எனவே இங்கு *பட்சிகள்* என்று சொல்லக்கூடிய *பறவைகள்* நல்ல நிலையில் வலுவாக இருக்கின்றன.
பறவைகளைப் பற்றிய வினா என்பதை உதயம் சுட்டிக்காட்டி விட்டது.
உதயம் வலுப் பெற்றுவிட்டது.
**கேட்கப்பட்ட கேள்வி சரி* என்று தெரிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக
*கேள்வி பறவைகளை வளர்க்கலாமா? (லவ் பேர்ட்ஸ் வளர்க்கலாமா?)*
இங்கே வளர்ப்பு என்பது தாயின் அரவணைப்பு, தாயின் அனுசரிப்பு, ஆதரவு, கவனிப்பு ஆகியன, மற்றும் அவைகளுக்கு சரியான முறையில் தரப்படும் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கும். இந்த செயல்பாட்டுக்கு காரகத்துவம் என்று பார்க்கும்போது தாயின் தன்மை வெளிப்படுகிறது. அதனை சந்திரனும் நான்காம் இடமும் சுட்டிக்காட்டுகிறது.
இதனை கொண்டு பிரசன்னத்தில் பார்க்கும்போது உதயத்தில் சந்திரன் இருக்கிறார். அதேபோல
உதயத்திற்கு நான்கில் சுக்ரன் அமர்ந்து திக் பலம் பெற்று இருக்கிறார்.
எனவே பறவைகள் அதற்குரிய வளர்ப்பு, உணவு முறை, அவைகளின் ஆதரவு, அரவணைப்பு, பாதுகாப்பு அனைத்தும் உடனடியாக கிடைத்து விடும். பறவைகள் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை பிரசன்னம் காட்டுகிறது.
பிரசன்னத்தில் பறவைகளை சுட்டிக்காட்டும் கோள் *புதன்* ஆவார்.
அந்த *புதன் ஐந்தாம் வீட்டில் ரிஷபமனையில் சுக்கிரன் வீட்டில் 🏡* அமர்ந்திருப்பது *பக்ஷிகள்* என்று சொல்லக்கூடிய பறவைகள் சுகமாக, சந்தோஷமாக, ஆனந்தமாக அவைகள் விரும்பியபடி இருக்க முடியும் ;வளர முடியும் என்பதை புதன் உணர்த்துகிறார்.
ஆருடாதிபதி என்று சொல்லக்கூடிய சுக்கிரன் உதயத்திற்கு நான்கில் அமர்ந்து திக்பலம் பெற்று வலுவாக இருக்கிறார்.
உதயத்தில் மற்றும்
ஆருடத்தில் கவிப்பு இல்லை.
உதயாதிபதி சனி பகவான் மற்றும் ஆருடாதிபதி சுக்கிர பகவான் கவிப்பில் இல்லை.
*வளர்ப்பு என்று சொல்லக்கூடிய காரக கிரகமான சந்திரன் மற்றும் வீடு என்று சொல்லக்கூடிய இரண்டாமிடம் மற்றும் நான்கு ஆகிய இடங்களும் ஆதரவு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடமும் கவிப்பில் இல்லை.*
7 ஆம் அதிபதி சந்திரன் உதயத்தில் இருப்பதால்
தாயின் பரிபூரண அன்பு ஆதரவு உணவு பராமரிப்பு அனைத்தும் பறவைகளுக்கு கிடைக்கும்.
அத்தோடு ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற குரு பகவான் கவிப்பில் இருந்தாலும் அவரது பார்வை உதயத்திற்கு விழுகிறது.
ஆக உதயம் வலுவாகிவிட்டது.
கேட்ட கேள்வி சிறப்பான நிலையில் *பறவைகள்* *நன்றாக வளரும்; * வளர்க்கலாம்* என்பதை *உறுதியாகத் திட்டவட்டமாகக் கூறலாம்.*
பிரசன்னத்தை கவிப்பு கொண்டு பதில் கூறி நிறைவு செய்ய வேண்டும் என்று ஒரு விதி உண்டு. அதன்படி பார்த்தால் கவிப்பு எட்டாம் இடத்தை கவித்து இருக்கிறது. குருவைக் கவித்து இருக்கிறது.
கவிப்பின் அதிபதி சூரியன் பத்தாம் இடத்தில் நீசம் அடைந்துவிட்டார்.
3, 12 அதிபதி குரு மற்றும் எட்டாம் அதிபதி சூரியன் ஆகியோர் வலு குறைந்து போனார்கள்.
அது ஒரு வகையில் நன்மையும் கூட. விரையம் ஆகாது. முயற்சி கெடாது.
பாதிப்பு வராது.
இவ்வாறாக நாம் பிரசன்னம் பார்த்து பழக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இந்த முறையில் நீங்கள் பிரசன்னத்திற்கு பலன் பார்த்து பதில் கூறலாம்.
என்ன.?... இப்போது புரிந்ததா! *ஜாமக்கோள் பிரசன்னத்தை சர்ப் எக்ஸல் போட்டு அலசுவது எப்படி?* என்று.
நன்றி வணக்கம்.🙏👍
**வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!!**
*கிரகங்களின் மாயாஜாலம்!* *ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!!*
🙏🦜
என்றும் அன்புடன்
*பிரம்மரிஷி ஜோதிட மையம்*
*எஸ்.ஷண்முகானந்தம்* *பொள்ளாச்சி*
*99657 28932*
*94437 28932*



Comments
Post a Comment