வைரத் தோடு* காணாமல் போய் விட்டது.

 *வாடிக்கையாளரின் கேள்வி* (பெண்)

ஒரு வருடத்திற்கு முன்பு எனது *வைரத்தோடு* காணாமல் போய் விட்டது.

அது திரும்ப கிடைக்குமா?



அதற்கான பிரசன்னம் இதோ!....👇



*பிரசன்னம் தந்த பதில்* 

 *காணாமல் போன வைரத்தோடு திரும்ப கிடைக்காது.*

_---------------------------------------------------------------------

ஏன்? எப்படி? பிரசன்னம் எவ்வாறு இதற்கான பதிலை கூறியது?

 *பிரசன்ன விளக்கம்*

 *பிரசன்னம் போடப்பட்ட தேதியும் நேரமும்*
 1 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி 16 நிமிடம் 46 நொடி.

 *சிம்மம்* *உதயம் 10 பாகை* 
 *கடகம் ஆருடம் 10 பாகை* 
 *கடகத்தில் கவிப்பு 20 பாகை*

 *உதயத்தில் சனி 6.3 பாகை*
6 ஆம் இடத்திற்குரிய சனி உதயத்தைக் கடந்து சென்று இருக்கிறார்.

 இது எதைக் காட்டுகிறது? எனில் வீட்டில் வேலை செய்த வயதான பெண்கள் மூலம் திட்டமிட்டு திருட்டு நடந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

 *கேள்வி சரிபார்ப்பு* 

பொதுவாக 6, 8 ,12 இடத்து அதிபதிகள் உதயத்தையோ அல்லது ஆருடத்தையோ தொடர்பு பெறும் போது திருட்டு நடந்தது என்று உறுதிப்படுத்தலாம்.

அந்த வகையிலே ஆறாம் அதிபதி சனி பகவான் உதயத்தில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

சரி அது மட்டுமா! நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டுவது ஆருடம் ஆகும்.அப்படி பார்க்கும் போது ஆருடம் 12ம் வீட்டில் விழுந்து இருக்கிறது.

இது எதைச் சொல்கிறது என்றால் திருடப்பட்ட பொருள்கள் வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டது. ஆருடம் சர ராசி ஆகவே பொருள் விரைவாகவே வெளியேறிவிட்டது.

 உதயம் ஸ்திர ராசி. திருட்டு நடந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது என்பதை உதயம் வெளிப்படுத்துகிறது.

ஆக பிரசன்னம் ஒரு கேள்வி கேட்கும் போதே அந்தக் கேள்வியின் நிகழ்வு எப்படி நடந்தது? என்பதைச் சுட்டிக் காட்டி விடும்.

கேள்வி கேட்டவர் நிலை என்ன என்று பிரசன்னம் தெளிவாக காட்டிவிட்டது.

இந்த கேள்விக்கு பிரசன்னம் எப்படி பதில் சொல்கிறது? 

அந்த காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்குமா? என்பதுதான்.

கிடைக்காது என்று ஏற்கனவே பிரசன்னம் சொல்லிவிட்டது.

 எப்படி உதயத்தில் அல்லது ஆருடத்தில் கவிப்பு இருந்தால் கேட்ட கேள்வி நடக்காது.

இங்கே பிரசன்னத்தில் ஆறு இடத்தில் கவிப்பு விழுந்திருக்கிறது.

 ஆகவே இந்த பொருள் திரும்ப கிடைக்காது என்பது உறுதியானது.

அதோடு மட்டுமல்லாது *வைரத் தோடுக்கு* காரகம் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் இங்கே நீசம் ஆகிவிட்டார்.

எனவே அப்பொருள் நிச்சயமாக திரும்ப கிடைக்காது என்று உறுதியாக கூறப்பட்டது.

=========================================


*நடந்தது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.*

  எப்பொழுதும் கேள்வி மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதால் நாம் மீண்டும் ஒருமுறை கேட்டோம். நன்றாக தேடினீர்களா? 

 வீட்டில்  யாரேனும் பெண்கள் வயதான பெண்கள் வேலைக்கு ஏதும் இருந்தார்களா?

 அப்படி எல்லாம் கேள்வியைக் கேட்கும் போது..... ஆமாம் ஒரு பெண் வந்து வேலைக்கு இருந்தாங்க. அவங்களோட வயது 51 வயதுக்கு மேல் இருக்கும் .

அந்தப் பெண்மணி 45 நாட்கள் வேலை செய்துவிட்டு கூலி ஏதும் வாங்காமல் தன்னுடைய மகனுக்கு or மகளுக்கு திருமணம் என்று சொல்லி ஊருக்குச் சென்று விட்டார்.

 அக்கவுண்ட் நம்பர் இருந்தால் கொடுங்கள்.உங்கள் அக்கவுண்டில் *payment* அனுப்பி வைக்கிறோம்  என்று சொல்லியும் அவர் அக்கவுண்ட் நம்பரை கொடுக்கவில்லை. 

45 நாள் வேலை செய்து யாரேனும்   வேலை பார்த்ததற்குரிய கூலியை வாங்காமல் செல்வார்களா.? என்று மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு வேலைக்கு வரச் சொல்லி அழைக்கும் பொழுதுதான் வாடிக்கையாளருக்கு தெரிந்தது தங்களுடைய அலைபேசி எண் பிளாக் செய்யப்பட்டு இருப்பதை உணர்கிறார்கள்.

 அதன்பின் ஒரு சில நாட்கள் கழித்து  வீடு முழுக்க  தேடியும் அந்த நகை மட்டும் கிடைக்கவில்லை. நகை காணவில்லை என்று அப்போது தான் தெரிந்தது.  தனது *வைர நகை காணாமல் போனது தெரிய வருகிறது*

 மேற்படி வேலை பார்த்த அந்த பணிப்பெண்ணின் மீது ஒரு புகாரை கொடுக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த பிரசன்னத்தில் *சுக்கிரன் நீச்சம்*

 *உதயாதிபதி எட்டில்.*

 *கவிப்பு கவிப்புத்திருப்பது வயதான பெண்களை குறிக்கக்கூடிய சந்திரனை கவித்து உள்ளது*

  ஆக இந்த பிரசன்னத்தின் படி அந்த பொருள் வீட்டை விட்டு வெளியேறி விட்டது. கிடைப்பது அரிது. 


எப்பொழுது காரக கிரகம் நீச்சமாக இருக்கிறதோ அப்பொழுது *அப்பொருள் இல்லை* என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*ஜாமக்கோளின் அற்புதத்தை என்னவென்று சொல்வது?

உள்ளதை உள்ளபடி உரைக்கும் உன்னதமான வழிமுறை ஜாமக்கோள் பிரசன்னம் ஆகும்.

*வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!* 


 *கிரகங்களின் மாயாஜாலம்!*
*ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!* 

நன்றி வணக்கம்

 *.....ஜாலம் தொடரும்*



Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்