3 in 1 புதிய பார்வையில் புதிய பரிமாணத்தில் ஜாமக்கோள் பிரசன்னம்
சுக்ரன் டிவி ஆசிரியர் தான் செய்யப்போகும் செயல்பாட்டுக்காக போடப்பட்ட பிரசன்னம்.
இது ஒரு ஆய்வு பிரசன்னம் .
முதலில் பொதுவாக நாம் எப்படி பிரசன்னம் பார்ப்போம்? என்பதை பற்றி கூறுகிறோம்.
அடுத்ததாக புதிய பார்வையில் புதிய பரிமாணத்தில் இந்த பிரசன்னம் எப்படி
பார்க்கப்பட வேண்டும் என்பதையும்
அதன் பின்னர் உண்மை நிலையில் என்ன நிகழ்வு நடந்தது என்பதையும் மூன்று பிரிவாக Three in one என்று இந்த பிரசன்னம் ஆய்வு இங்கே மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது ஒரே பிரசன்னம் 3 நிலையில் எப்படி செயல்பட்டுள்ளது என்பதைப் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
1.முதலாவது நிலை சாதாரணமாக நாம் பார்த்து பலன் சொல்லக்கூடிய முறை
*உதயம் கன்னி*
*ஆருடம் 12ல்* (சிம்மத்தில்).
*கவிப்பு 9ல்* (ரிஷபம்).
*உதயத்தில்* பாம்பு. பாம்பு உதயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
ஆருடத்தில் சூரியன். *ஆருடம்* சூரியனைக் கடந்து விட்டது.
*கவிப்பு* ஒன்பதாம் பாவத்தில் உள்ளது. ஒன்பதாம் பாவத்தில் உள்ள *குருவைக் கவித்திருக்கிறது.*
உதய அதிபதி புதன் ஏழாம் பாவத்தில் உள்ளது உதயாதிபதி புதன் நீசம்.
எனவே நினைத்த காரியம் நடக்காது.
உதயத்தில் பாம்பு.
நடக்கப் போகும் நிகழ்வு எதிர்பார்த்த விளைவை பலனை தராது என்பதை காட்டுகிறது.
ஆருடம் பன்னிரெண்டாம் பாவத்தில். பன்னிரண்டாம் பாவம் விரய ஸ்தானம் வீண் செலவுகள் ஏற்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
ஆருடத்தில் உள்ள சூரியன் அரசு மற்றும் அரசு சார்ந்த வகையில் இந்த வீண் செலவுகள் ஏற்படும்.
கவிப்பு ஒன்பதாம் பாவத்தில் உள்ளது ஜாதகருக்கு ஏற்படக்கூடிய நஷ்டம், விரயம், சேதாரம், ஜாதகருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகியவற்றைத் தெரிவிக்கும் இந்த ஒன்பதாம் பாவமான ரிஷப மனை. இங்கே குருபகவான் கவிப்பில் சிக்கி இருக்கிறார்.
உதயத்திற்கு 4 மற்றும் 7க்கு அதிபதியான குரு பகவான் கவிப்பில் மாட்டி இருப்பதால் வீடு, வண்டி, வாகனம் சார்ந்த நிலைகளுக்கும் மற்றும் ஏழாம் பாவத்தில் கூட்டாளிகள், கூட்டுத்தொழில், தொழில் சார்ந்த விஷயங்கள் ஆகியவை பாவ அடிப்படையில் பாதிப்புகளைக் காட்டும் அதனால் சில விரயங்கள் ஏற்படும்.
*Result*
ஜாதகர் தான் செய்யப்போகும் செயல்பாட்டில் எதிர்பார்த்த படி நிகழ்வுகள் நடக்காது.
அடுத்ததாக வீடு வண்டி வாகனம் சம்பந்தமான விஷயங்களில் ஜாதகர் தொழில் சார்ந்த விஷயங்களில் செய்யப் போகும் நிகழ்வுகள் முழுமை பெறாது.அவற்றில் சில தடைகளையும் விரையங்களையும் ஏற்படுத்தும்.
@@@@@@@
*இரண்டாம் நிலை*
**புதிய பார்வையில் இந்த பிரசன்னம்*
*
இந்த இரண்டாம் நிலையானது முதல் நிலையில் இருந்து சற்று விரிவாக ஆழமாக நுட்பமாக பார்க்கக்கூடிய நிலை என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது உதயம் இல்லாமலேயே ஆருடத்தை கொண்டு கவிப்பை வைத்து ஒரு செயல் நடக்குமா? நடக்காதா? என்பதை நாம் காணலாம்.
ஜாதகர் தான் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி இன்னும் கூறவில்லை.
அதேசமயம் ஆருடமும் கவிப்பும் எந்த மாதிரியான செயல்பாட்டை காட்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஆருடம் நடந்து முடிந்த நிகழ்வை சுட்டிக்காட்டுவது. கடந்தகால நிகழ்வை எடுத்துக் காட்டுவது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆரூடத்தில் சூரியன் இருக்கிறார்.
எனவே அரசு சார்ந்த அரசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடந்து இருக்கிறது என்பதை காட்டுகிறது.
இதனை ஜாம கிரகமான சூரியனை ஆரூடம் கடந்து வந்ததைக் காட்டுகிறது.
ஆரூடத்திலிருந்து கவிப்பு ஒன்பதாம் பாவம்.
ஒன்பதாம் பாவம் என்பது உயிர் காரகத்துவம் எனில் தந்தையை குறிக்கும்.
ஜட காரகத்துவம் என்று சொல்லக்கூடிய பொருள் நிலையில் பள்ளி, கல்லூரி, வங்கி, கருவூலம், அறநிலையம், தர்ம ஸ்தாபனம், மதம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை குறிக்கும்.
ஒன்பதாம் பாவத்தில் கவிப்பு என்பதால் ஒன்பதாம் பாவத்தில் உள்ள செயல்பாடுகள் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் ஜாதகருக்கு பாதிப்பை காட்டும். அதனால் அந்த வகையில் செலவுகளையும் நஷ்டங்களையும் சேதங்களையும் ஜாதகருக்கு ஏற்படுத்தும் என்பதை கவிப்பு தெரிவிக்கிறது.
மேற்கண்ட பலன்கள் ஆருடம் மற்றும் கவிப்பைக்கொண்டு தீர்மானிப்பது.
இப்போது பிரசன்னத்தில் உதயத்தை கொண்டு பார்த்தால் உதய அதிபதி ஆகிய புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார்.
உதயாதிபதி புதன் ஏழாம் இடத்தில் இருப்பது என்பது எதிர்ப்பாலர், மனைவி, தொழில்முறையில் கூட்டாளி ஆகிய உயிர் காரகத்துவங்களைக் குறிக்கும்.
ஜட காரகத்துவம் என்ற பொருள் நிலையில் வியாபாரம் கூட்டுத்தொழில் பார்ட்னர்ஷிப் ஆகியவற்றைக் குறிக்கும்.
எனவே கேள்வியாளர் என்று சொல்லக்கூடிய ஜாதகர் ஏழாம் வீட்டு செயல்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறார் என்பதை உதயாதிபதி 7ஆம் பாவத்தில் சென்றதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
அதேசமயம் உதய அதிபதி புதன் 7-ஆம் இடத்துக்கு மீனத்திற்கு சென்றது உதய அதிபதி நீசம் அடைகிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. புதனின் காரகத்துவங்கள் மற்றும்
செயல்பாடுகள் அனைத்தும்
செயலிழந்து பலம் இழந்து நிற்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
புதனின் காரகத்துவம் பேனா, காகிதம், எழுது பொருட்கள், ரசீது புத்தகம், வீடு, மனை சார்ந்த பத்திரம், உறுதிமொழி பத்திரம் டாக்குமெண்ட்ஸ் ஆகியவற்றைக் குறிக்கும்.
புதனின் உயிர் காரகத்துவம் என்று சொல்லக்கூடிய தாய் மாமா, காதலன், காதலி எழுத்தர், பத்திரம் தயாரிப்போர், ஆடிட்டர், வரவு செலவு கணக்கு பார்ப்போர், கணக்காளர், கிளார்க் ஆகியோரைக் குறிக்கும்.
மேற்கண்ட உயிர் காரகத்துவம் மற்றும் பொருள் காரகத்துவம் ஆகியவை பலமிழந்த நிலையில் ஜாதகர் செய்யக்கூடிய செயல்களிலிருந்து நல்ல விளைவு நாம் எதிர்பார்த்தபடி இருக்காது நடக்காது என்பதை புதன் நிஷ்பலம் (பலம் இழந்த நிலை) அடைந்ததிலிருந்து தெரிகிறது.
அதேசமயம் புதன் ஏழாமிடமான மீனத்திற்கு சென்ற போதும் மேலோட்டமாக பார்க்கும்போது புதன் நீசம் அடைந்து இருக்கிறார் என்றுதான் தெரியும்.
புதன் 15 டிகிரி வரை தான் நீசமாகிறார்.
பிரசன்னத்தில் புதன் 17 டிகிரி தாண்டித்தான் இருக்கிறார்.
எனவே புதன் நீசம் என்று சொல்ல முடியாது.
அதேசமயம் அவர் 7-ல் நிற்பதால் தன்னிலையில் பலம் இழந்து பலவீனமடைந்து காணப்படுகிறார்.
மேலும் உதயாதிபதி புதன் உபய ராசியான மீனத்திற்கு சென்றதால் (உபய ராசி) அதனுடைய செயல்பாடானது இரண்டு விதமான செயல்களை மேற்கொள்ளும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது ஒரு செயல் நடக்கும் அல்லது நடக்காமலும் போகும் என்ற இரு நிலைகளையும் இங்கே காட்டும்.
ஆருடம் சூரியனைக் கடந்து வந்ததால்
உதயத்திற்கு பன்னிரெண்டாம் பாவத்தில் ஆருடம் இருப்பதால் அரசு சார்ந்த விஷயங்களில் அரசாங்க அதிகாரிகளாலும் சில விரையங்களை ஜாதகர் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது.சிம்மம் ஸ்திர ராசி. நிச்சயமாக நடக்கும். அதுதான் நிகழ்வாக நடந்தே இருக்கும்.
கவிப்பு ஒன்பதாம் பாவத்தில் இருக்கிறது குருவைக் கவித்து இருப்பது குருவின் காரகங்கள் மற்றும் அதன் 4 மற்றும் 7 க்குரிய ஆதிபத்திய பலன்களும் இங்கே பாதிக்கப்பட்டு சேதமடைந்து இருக்கும். ஜாதகருக்கு அதனால் நஷ்டத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் காட்டுகிறது.
குருவின் காரகம்
என்று சொல்லும்போது தனம் புத்திரம் ஆகியவற்றைக் குறிக்கும்.
ஏழாம் இடம் தொழில் சார்ந்த நிலையை குறிப்பதால் குருவின் உயிர் காரகத்திற்கு இங்கே வேலை இல்லை.
எனவே குருவின் மற்றொரு காரகமான தனத்திற்கு சேதாரத்தை ஏற்படுத்தி இருக்கும். பணவிரயம் ஏற்படுத்தும்
இப்போது கவிப்பு 9மிடம் என்பதால் இங்கே உயிர் காரகத்திற்கு பதிலாக பொருள் காரகத்தில் பள்ளி, வங்கி, கருவூலம் சார்ந்த அரசு அலுவலகங்களில் இந்த விரையம் அந்த பகுதிகளில் கண்டிப்பாக நடந்திருக்கும்.
இன்னும் ஆழமாகச் சென்று பார்ப்போமானால் *கவிப்பு ஒரு நிகழ்வின் ரகசியத்தைக் காட்டும்*
அந்த ரகசியம் என்ன? என்று பார்க்கும்போது கவிப்பு ஒன்பதாம் பாவத்தில் 4 டிகிரியில் நிற்கிறது. கவிப்பு பின்நோக்கி தான் செல்லும்.
4வது பாகை என்று சொல்லும்போது கார்த்திகை மூன்றாம் பாதத்தைக் குறிக்கும். கார்த்திகை நட்சத்திரம் சூரியனுக்கு உரியது.
சூரியன் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள், பள்ளி, வங்கி, ஆடிட்டர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், தபால் நிலையங்கள் ஆகியன இங்கே குறிக்கும்.
காரணம் ஏற்கனவே அரசு சார்ந்த விஷயங்களில் ஆரூடம் 12லிருந்து விரயத்தைக் காட்டியது என்பதை சுட்டிக்காட்டி விட்டது.
எனவே அரசு மற்றும் அரசு சார்ந்த வங்கி மற்றும் புதனுடைய காரகமான ஆடிட்டர் என்ற உயர்ந்த பதவி வைக்கக்கூடிய அலுவலகங்களில் இந்த நிகழ்வுகளை நடத்தி ஜாதகர் எதிர்பார்த்து சென்றதுபோல் செயல்பாடுகள் அங்கே நிகழாமலும்
நடந்தது போலவும் நடக்காதது போலவும் விரயத்தையும் தந்தது போலவும்
விரையும் இல்லாமலும் செய்து நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறது என்பதுதான் நாம் இந்த பிரசன்னம் வாயிலாக இதனுடைய புதிய கோணத்தில் இருந்து புதிய பார்வையில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிரசன்னம் சனிக்கிழமை அன்று ராகுகாலத்தில் போடப்பட்டிருக்கிறது.
ஜாமக்கோள் பிரசன்னத்தில்
கௌரியும் ஹோரையும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அதன் செயலாக்கமும் ஆதிக்கமும் நிகழ்வில் எவ்விதம் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது என்பதையும் இங்கே எடுத்துக் காட்டவே இந்த பிரசன்னம் பற்றிய விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
கௌரி *விஷ கௌரி* வேளை. அது ராகு காலம் ராகு காலத்தில் செய்யப்படும் செயல்பாடுகள் ஒரு செயலை முழுமையாக நடத்திட விடாமல் தடையைக் காட்டும். ஏற்படுத்தும்.
உதயத்தில் உள்ள பாம்பு இதனை செயல் படுத்தி விட்டது.
ஹோரை *சூரிய ஹோரை.*
அரசு சார்ந்த விஷயங்களில் பாதிப்பைக் காட்டும். தடையை ஏற்படுத்தும். நாம் எதிர்பார்த்தது போல நிகழ்வு நல்லபடியாக அதன் முடிவை தந்துவிடாது என்பதையே இந்த பிரசன்னத்தின் ஆரம்பத்திலேயே காட்டிவிட்டது.
--------++++-------
3வது
உண்மையில் நடந்தது என்ன?
ஜாதகர் ஒரு லோனுக்காக வங்கியில் தனது சேமிப்பு கணக்கு பற்றிய விவரங்களை ஆறுமாத கால சேமிப்பு கணக்கு பற்றிய விவரங்களை வங்கியில் கேட்கச் செல்கிறார். அதற்காக நிறைய பக்கங்கள் பிரிண்ட் அவுட் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் செலவு அதிகமாக பிடிக்குமென்று ஆறு மாதத்திற்கு பதிலாக மூன்று மாத செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை சேமிப்பு கணக்கு பற்றியவை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார். முன்னதாக வங்கி மேலாளர் ஆறுமாதம் என்பவை கணக்கு விவரங்களை தருவதற்காக 300 ரூபாய் கட்டச் சொல்லி வாங்கி விட்டார்.
நிறைய பக்கங்கள் வருகிறது என்பதால் மீண்டும் அதற்கு print out செலவு அதிகம் ஆகும் என்று மீண்டும் ஒருமுறை புதியதாக சலான் எடுத்து கட்டித் தரும்படி மறுபடியும் 300 ரூபாய் கட்ட சொல்கிறார். மீண்டும் 300 ரூபாய் கட்டுகிறார்.
இங்கே வங்கி கணக்கில் விவரங்களைக் கேட்க இரண்டு முறை ஜாதகர் பணம் விரயம் செய்ய வேண்டியதாகியது.
தான் எதிர்பார்த்தது போல முதலிலேயே மூன்று மாத கணக்கை வாங்க முடியவில்லை. இரண்டு முறை பணம் கட்ட வேண்டியது ஆகிற்று. இது வீண்செலவு விரையம் அல்லவா!?இது முதல் செயல்பாடு
அடுத்ததாக அவர் தனது வீட்டுக்கு உரிய இடத்திற்கு லோன் வாங்க வேண்டும் என்று வீட்டின் மீது உள்ள பத்திரத்தை கொண்டு பஞ்சாயத்து ஆபீசுக்கு சென்று வீட்டு வரி ரசீது கட்ட செல்கிறார்.
வீட்டு வரி ரசீது வருடாவருடம் ஒரு கட்டவில்லை. லோன் வாங்க வேண்டும் என்பதற்காக இப்போது அவர் வீட்டு வரி ரசீது தேவைக்காக அந்த அலுவலகம் சென்றிருக்கிறார். ஆனால் ரசீது போடும் நபர் அங்கே இல்லை. வேறொரு விஐபி இவருக்கு ஒரு தகவலைச் சொல்லி பணத்தை கொடுத்து விட்டுச் செல்லுங்கள்; நாங்கள் உங்களுக்கு ரசீது போட்டு தந்து அனுப்பி வைக்கிறோம். நீங்கள் அங்கே சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்ல இவரும் அந்த ஒரு வருட காலத்திற்கு பதிலாக இரண்டு வருட காலத்திற்கும் உரிய தொகைக்கும் மேலாக கூடுதலாக பணத்தை கொடுத்துவிட்டு தனக்கு ரசீது போட்டு அனுப்பி வைக்கும்படி சொல்லிவிட்டு திரும்பி வந்து விடுகிறார்.
அங்கேயும் இவர் எதிர்பார்த்தது போல வீட்டு வரி ரசீது போட்டு வாங்க முடியவில்லை. கூடுதல் பணம் செலுத்திவிட்டு தான் வந்திருக்கிறார். இது இரண்டாம் நிலை
-------------++++--------------
@@அடுத்ததாக மூன்றாவது செயல்பாடு @@
தானொரு டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டி, உரிய ஆவணங்கள் உடன் எடுத்துச்சென்று தனது ஆடிட்டரை சந்தித்தார். ஆடிட்டர் பத்திரப்பதிவு செய்ய வேண்டி டிரஸ்ட்டை பதிவு செய்வதற்காக உரிய தொகையை பெற்றுக் கொண்டார்.
பதிவு செய்வதற்காக உரிய பத்திரம் வேண்டும் என்று 300 ரூபாய்க்கு பத்திரம் வாங்கி வரும்படி ஜாதகரை அனுப்பிவைத்தார்
. ஜாதகர் பத்திரத்துக்காக அலைந்து திரிந்து கிடைக்காமல் திரும்பி வந்து பத்திரம் கிடைக்கவில்லை என்று ஆடிட்டரிடம் சொல்ல 300 ரூபாய்க்கு இல்லை என்றால் 500 ரூபாய் பத்திரம் வாங்கி இருக்கலாமே! என்று கேட்க அது தனக்கு தோணவில்லை. திரும்பி வந்துவிட்டேன் என்று சொல்ல ஆடிட்டரும் அவரிடம் சரி குடுங்க நானே செய்து விடுகிறேன் என்று அவரிடம் கூடுதலாக மீண்டும் பணம் பெற்றுக் கொண்டு திருப்பி அனுப்பிவிட்டார். இது மூன்றாவது செயல்.
மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலும் பற்றிய விளைவுகள் தான் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை என்பதை அவர் உணர்ந்தார். ஆனாலும் அந்த வேளையில் மேற்கூறியவற்றுக்கான தயாரிப்பு பணிகளையும் முன்னேற்பாடுகளையும் தான் செய்துவிட்டதாக மனதில் திருப்தி படுத்திக்கொண்டார்.
ஆனாலும் காரியங்கள் முழுமையாக நிறைவு பெறவில்லை என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.
உபயத்தில் நின்ற (மீனத்தில்) உதயாதிபதி புதன் இருவிதமான செயல்பாடுகளை இங்கே நடத்தியுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
அதேசமயம் உதயத்தில் நின்ற பாம்பு உதயத்தை நோக்கி வந்ததும்
பாம்பு தான் எதிர்பார்த்தபடி மேற்கொண்ட செயல்பாடுகளில் நல்ல முடிவை தராமல் தடையை ஏற்படுத்தி விட்டது என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஆக மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து ராகு காலத்தில் செய்யப்படும் எந்த செயலும் முடிவு பெறாது; நல்ல பலனைத் தராது என்பதை விஷகௌரி சுட்டிக்காட்டுகிறது.
ஹோரை நாதன் சூரியன் செயல்பாடு
ஹோரை சூரியன் என்பதால் அரசு சார்ந்த விஷயங்களில் ஏற்பட்ட தடையும் வீண் விரயங்களையும் கூடுதல் செலவுகளையும் காட்டிவிட்டது.
கவிப்பு குருவை கவித்ததால் பண விரையம் பண நஷ்டம் ஆகியவை ஜாதகருக்கு ஏற்படுத்தியது என்பதையும் இந்த பிரசன்னம் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். தெரிந்துகொள்ளலாம்.
இதற்கும் இந்த ஜாதகர் ஒரு நல்லபடியாக பலன்களைக் கணித்து கூறக்கூடிய ஜோதிடர் ஆவர்.
இருந்தாலும் அவரையும் இந்த ராகு வேளையில் போட்ட இந்த பிரசன்னத்தின்படியே அவருக்கும் இந்த ஜாமக்கோள் பிரசன்னத்தின் செயல்பாடுகளை நடத்தித்தான் ஜாமக்கோள் பிரசன்னம் நடத்திருக்கிறது என்பதை நாம் தெட்டத் தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் மிக ஆழமாகவும் புரிந்து கொள்வோமாக!
வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!
*கிரகங்களின் மாயாஜாலம்! ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!!*
என்பதை இதன் வாயிலாகவே நாம் முற்றும் தெளிவாகவும் திருத்தமாகவும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி
வணக்கம்.
S.ஷண்முகானந்தம்
ஸ்ரீ பிரம்மரிஷி ஜோதிட மையம்
பொள்ளாச்சி 642 002
*99657 289 32*
*94437 289 32*


Comments
Post a Comment